‘கொல்லப்பட்ட’ பெண் புகார்…!!!!!

 ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்…!!!!!

வன்கொடுமை செய்து ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்… கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!!!

     

    உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம்.

   4 பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, உயிர்பிழைத்த பெண் அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் ராய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.

   சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீடில் ஒரு விசேஷத்துக்காக சென்றிருக்கிறார் இவர். அன்று இரவு குப்பையை கொட்டுவதற்காக வெளியே வந்த இவரை 4 பேர் – காத்திருந்தது – இவரை இழுத்துச் சென்று, அங்கிருந்து தனித்த இடத்துக்கு தூக்கிச்சென்றனர்.

   உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம். இதனைத் தொடர்ந்து, வாயில் துணி அடைத்து தூக்கிச் சென்று, அந்தப் பெண்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

   பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமன்றி அவரை கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயற்சி செய்திருக்கின்றனர். கழுத்தை நெரித்த நேரம் அவர் (பாதிக்கப்பட்ட பெண்) மயங்கவே, இறந்துவிட்டதாக நினைத்து நால்வரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

  மயக்கம் தெளிந்து மாமா வீட்டுக்குச் சென்ற பெண், இந்தச் சம்பவம் குறித்து ஏதும் வாய்திறக்கவில்லை. தன் பெற்றோர் வந்ததும் இதைச் சொல்லி அழுதிருக்கிறாள்.

   இந்தப் பெண்ணுக்கான நியாயமும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்காமல் இதை விடப்போவதில்லை என்று முடிவெடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகாரளித்தனர். அந்த நால்வரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

   இந்நிலையில் நேற்று குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க இந்த பெண்ணின் நிலைக்கு காரணமானவர்கள் என்றுகுற்றம் சாட்டப்பட்டு தற்போது கைது செய்ய்ப்பட்டிருக்கும் நால்வருமே 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   பெண்களின் நலன் குறித்த எல்லா முன்னெடுப்புகளும் பொதுவெளியில் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகின்றன. ஆனாலும், பதின்பருவ கையாளுகையில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோமோ என்பதைத்தான் இது நினைவுபடுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

  கொன்றுவிட்டதாய் நினைத்துக்கொண்டிருந்த பெண், அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்பட்டிருப்பது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...