எங்கிருக்கிறார் நித்யானந்தா?
எங்கிருக்கிறார் நித்யானந்தா? ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, தற்போது எங்கிருக்கிறார் என்பது பற்றி ஈக்வடார் தூதர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருபவர் சாமியார் நித்யானந்தா. இவரது சமீபத்திய சர்ச்சை குஜராத் ஆசிரமத்தில் இருந்த தனது இரு மகள்களை நித்யானந்தா கடத்திச் சென்றுவிட்டார் என்று அம்மாநில போலீசில் ஜனார்த்தன சர்மா அளித்த புகார் தான்.
துதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நித்யானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இவர் ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு தனி நாடு அந்தஸ்திற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதெல்லாம் ஒரு சட்டமா? – நகலை கிழித்தெறிந்த எம்.பி.யால் பார்லிமென்ட்டில் பரபரப்பு!!
அந்த தீவிற்கு “கைலாசா” என்று பெயரில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தா அமர்ந்திருப்பது போல் தனிக்கொடி, தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் பதிவிட்டுள்ளனர்.
இந்த தீவில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியும் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருக்கும் ஈக்வடார் தூதர் ஜெய்மி மார்சன் ரோமெரோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சுற்றுலா பயணியாக ஈக்வடார் நாட்டிற்கு நித்யானந்தா வந்தார். அங்கிருந்த படியே தனக்கு ”சர்வதேச புரடக்ஷன் ஸ்டேட்டஸ்” வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.
ஹைதராபாத் என்கவுன்டர்: அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
இவரது கோரிக்கையை ஆய்வு செய்த பின்னர், அதே ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தற்காலிக விசா வழங்கப்பட்டது. இதையடுத்து ”அகதி” அந்தஸ்து வழங்கக் கோரி நித்யானந்தா செய்த விண்ணப்பத்தை ஈக்வடார் தேசிய ஆணையம் நிராகரித்து விட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த நித்யானந்தா ஈக்வடார் நாட்டின் நீதித்துறையிடம் முறையீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஈக்வடார் நாட்டில் இருந்து வெளியேறினார். அப்போது ஹைதி தீவிற்கு தான் போகிறேன் என்று கூறிச் சென்றார்.
”கைலாசா” என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை. ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.