இன்றைய ராசி பலன்கள் – 07.12.2019 – சனிகிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : நிதானத்துடன் செயல்படவும்.
கிருத்திகை : விமர்சனங்கள் நேரிடலாம்.
——————————-
ரிஷபம் :
சாதுர்யமான பேச்சுக்களால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நண்பர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். தொழிலில் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : காரியசித்தி உண்டாகும்.
ரோகிணி : நட்புகள் மலரும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
——————————-
மிதுனம் :
புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
——————————-
கடகம் :
பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளியூர் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
——————————-
சிம்மம் :
பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். பிறரின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். இணையதளம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : அமைதி காக்கவும்.
பூரம் : காலதாமதம் நேரிடலாம்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
——————————-
கன்னி :
எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலையில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களிடம் அனுகூலமான சூழல் உண்டாகும். அரசு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உடல்நிலையில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : செலவுகள் குறையும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
துலாம் :
பணியில் இருந்துவந்த தடைகள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். தந்தைவழி உறவுகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை செயல்படுத்துவதால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மரியாதைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தடைகள் அகலும்.
சுவாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : மரியாதைகள் அதிகரிக்கும்.
——————————-
விருச்சிகம் :
நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : இன்பமான நாள்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : மரியாதை அதிகரிக்கும்.
——————————-
தனுசு :
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான சூழல் ஏற்படும். பணி நிமிர்த்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : இலாபம் அதிகரிகும்.
——————————-
மகரம் :
செய்தொழிலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
——————————-
கும்பம் :
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேம்படும். அலங்கார பொருட்களின் மீது நாட்டம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.
——————————-
மீனம் :
பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : தனவரவு மேம்படும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
——————————-
            – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...