ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. இன்று பிற்பகல் விடுதலை!

 ப. சிதம்பரத்திற்கு ஜாமீன்.. இன்று பிற்பகல் விடுதலை!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இன்று பிற்பகல் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் இன்று முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்கு சென்று 100 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது.
இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டு தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் அமலாக்கத்துறை இவரை உடனே கைது செய்தது. அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்தது விசாரித்தது இதில் அமலாக்கத்துறை வழக்கு மிகவும் வலுவாக இருப்பதால் அதில் இருந்து ப. சிதம்பரத்திற்கு எந்த விதமான ஜாமீனும் கிடைக்கவில்லை.
அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதில் அவருக்கு நிறைய உடல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ப. சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்தது.
கடைசியாக நவம்பர் 14ம் தேதி இந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை கடந்த நவம்பர் 28ம் தேதி நடந்து முடிந்தது.
டெல்லி ஹைகோர்ட் நீதிபதியின் தீர்ப்பில் இருக்கும் இந்த தவறையும் தன்னுடைய உடல் நலத்தையும் சுட்டி காட்டி ப.சிதம்பரம் ஜாமீன் கோரினார்.அவர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி மற்றும் நீதிபதிகள் ஏ எஸ் போபன்னா, ஹிரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில் ப.சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வந்தனர். அமலாக்கத்துறை சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.அதன்படி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு இன்று பிற்பகல் திகார் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சிதம்பரம். அவரால் இதனால் வெளிநாடு செல்ல முடியாது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...