‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
‘இறந்து போய் சாம்பார் அண்டாவில் மிதந்த எலி!’.. 9 பள்ளிக் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த உணவை உண்டதால் 9க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம் வந்து சுருண்டு விழுந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில், அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மதிய சத்துணவில் இறந்து போன எலி இருந்ததுதான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவின் பருப்பு சாம்பார் இருந்த பாத்திரத்தில் இறந்த எலி இருந்துள்ளது.
இதனால் 9க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி, பேதி, மயக்கம் வந்து அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மாவட்ட ஆட்சியர்கள், நிர்வாக அலுவலகர்கள், குழந்தைகள் நல அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தகவல் போக, குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவு சப்ளை செய்த என்.ஜி.ஓ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பிளாக் லிஸ்டும் தயார் செய்யப்பட்டது.
இதுகுறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.