இன்றைய ராசி பலன்கள் – 03.12.2019 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : செயல் வேகம் அதிகரிக்கும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும்.
—————————————
ரிஷபம் :
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதைகள் உயரும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : ஒற்றுமை மேலோங்கும்.
மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
—————————————
மிதுனம் :
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் உள்ள சங்கடங்கள் குறைந்து தெளிவு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : மதிப்புகள் உயரும்.
புனர்பூசம் : கவலைகள் குறையும்.
—————————————
கடகம் :
தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : பயணங்கள் உண்டாகும்.
பூசம் : சூட்சமங்களை கற்பீர்கள்.
ஆயில்யம் : விமர்சனங்கள் நேரிடலாம்.
—————————————
சிம்மம் :
தனவரவுகளால் சேமிப்பு உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : சேமிப்பு உயரும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
—————————————
கன்னி :
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம். பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
—————————————
துலாம் :
வாரிசுகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு உயரும். பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் கூடும். வெளிநாட்டு வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : செல்வாக்கு உயரும்.
சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
விருச்சிகம் :
தாய்வழி உறவுகளிடம் சற்று அனுசரித்து செல்லவும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நலீ ம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.
—————————————
தனுசு :
மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். இளைய உடன் பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். மனதைரியத்துடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : திறமைகள் வெளிப்படும்.
பூராடம் : ஆதாயம் ஏற்படும்.
உத்திராடம் : சேமிப்பு உயரும்.
—————————————
மகரம் :
வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் பெருமைகள் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். கடன்களை அடைக்க முயல்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : பெருமைகள் உண்டாகும்.
திருவோணம் : நிதானம் வேண்டும்.
அவிட்டம் : இலாபம் அடைவீர்கள்.
—————————————
கும்பம் :
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகள் இனிதே நிறைவேறும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவுதிறன் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : ஆசிகள் கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
மீனம் :
பயணங்களால் இலாபம் உண்டாகும். தாயாரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கால்நடைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடலாம். வாகன அபிவிருத்தி உண்டாகும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். வாசனை பொருட்களின் மூலம் இலாபம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : மருத்துவ செலவுகள் நேரிடலாம்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.
—————————————
– ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...