மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாத உண்டியல் காணிக்கையாக, ரூ.74.45 லட்சம் ரொக்கம், 576 கிராம் தங்கம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல்.
100வது நாளாக திகார் சிறையில் ப.சிதம்பரம்! முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
சீற்றம்குறைந்தது – கடலுக்கு சென்ற மீனவர்கள். நாகையில் கடல் சீற்றம் தணிந்ததையடுத்து, இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியது. நெல்லை: பாபநாசம் அணை முழுகொள்ளளவான 143 அடியை எட்டியது, தாமிரபரணி ஆற்றில் மக்கள் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தல்.
ஆஸ்திரேலியாவிலிருந்து, 2 சிலைகளை அந்நாட்டு பிரதமர் இந்தியா கொண்டு வருகிறார்: பொன்.மாணிக்கவேல்.
பெங்களூரு: கே.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிமன்யு மிதுனிடம் நகர குற்றவியல் தடுப்பு போலீசார் விசாரணை இந்த விவகாரத்தில், 4 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கைது.
சென்செக்ஸ் 33.38 புள்ளிகள் உயர்ந்து 41,053.99 புள்ளிகளுடன் துவக்கம்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை, எப்போதும் அந்த நிலைக்கு செல்லாது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். 2014-2019ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5% ஆக உள்ளது, 2009-2014ம் ஆண்டில் இது 6.4 சதவீதமாக இருந்தது – நிர்மலா சீதாராமன்.
2 யூனியன் பிரதேசங்கள் இணைப்பதற்கான மசோதா நிறைவேற்றம். தாத்ரா – நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் இணைப்பதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கோவையில் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் தீயணைப்புதுறை அதிகாரி பாலசுப்பிரமணியன் (52) பணியிடை நீக்கம்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு . மீண்டும் விசாரித்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.