இன்றைய முக்கிய செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 16ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம். இந்த விசாரணைக்கு ஆஜராக முகிலன் உட்பட 29 பேருக்கு சம்மன்.
வனத்துறை எச்சரிக்கை.
பொள்ளாச்சி, அர்த்தனாரிபாளையம் வனப்பகுதியில் காட்டு யானை அரிசி ராஜா பதுங்கியுள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் – வனத்துறை எச்சரிக்கை.
விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு. விஷவாயு தாக்கிய தம்பியை காப்பாற்ற முயன்றபோது அண்ணன் உயிரிழந்த சோகம்
பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு
சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அவரது கனரக தொழில், பொதுத்துறை நிறுவனங்கள் துறை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது
வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்
வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமுற்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
‘தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு‘
தமிழகத்தில் வரும் 14 முதல் 16ம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்.தனது தந்தையின் உடல்நலம் கருதி மீண்டும் ஒரு மாத பரோல் பேரறிவாளானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தங்கம் சவரனுக்கு ரூ.112 குறைவு
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,976க்கு விற்பனை.
காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள், 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வரின் கருத்து-
இதில் அரசுக்கு தொடர்பு இல்லை. கால அளவு குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது. கட்சிகளின் கொடி கம்பங்கள் நடகூடாது என்ற உத்தரவு இதுவரை