இன்றைய முக்கிய செய்திகள்
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லையை பிரித்து நெல்லை, தென்காசி, காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
கட்டுக்கட்டாக ரூ.100 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல். தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிடிபட்டது. புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல். பழைய 500, 1000 கள்ளநோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர், தெலங்கானா போலீசார்
ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் 22 கேரட் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.29,072க்கு விற்பனை.
கோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்தது தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்க கோரி டிராபிக் ராமசாமி முறையீடு. ஆய்வு செய்து உரிய ஆவணங்களுடன் மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புதல்.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை திரட்டுவது தொடர்பான ஒப்பந்தம். அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மாநாட்டில் துணைமுதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் கையெழுத்து.
வேலூர்: டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சரிவர செயல்படாத தற்காலிக பணியாளர்கள், 50 பேரை பணிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு
ராதாபுரம்: முடிவு அறிவிக்க தடை நீட்டிப்பு – உச்சநீதிமன்றம்
ரபேல் வழக்கில் நாளை தீர்ப்பு – உச்சநீதிமன்றம் அறிவிப்பு: தலைமை நீதிபதி கொண்ட 3 பேர் அமர்வு, நாளை தீர்ப்பு வழங்குகிறது. ரபேல் ஒப்பந்தம் முறைகேடு புகார் தொடர்பாக மறுசீராய்வு மனு.
சபரிமலை: சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலை கைதி பல்வந்த்சிங்கின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைத்தது மத்திய அரசு. சீக்கியர்களுக்கு கருணை காட்டும் மத்திய அரசு 7 தமிழர்கள் விடுதலைக்கு மட்டும் இரங்க மறுப்பது ஏன்? – பாமக நிறுவனர் ராமதாஸ்.