போதை வேண்டாம்
போதை வேண்டாம்
மதுரையில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் வாட்ஸ்ஆப் ஆடியோ மூலம் எச்சரித்துள்ளார்
மதுரை மாநகர் பகுதியில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் கஞ்சா , போதை மாத்திரை உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருவதாக கூறப்படுகிறது . இதுபோன்றவர்கள் திருட்டு , கொள்ளை , கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களில் மட்டும், போதைக்கு அடிமையானவர்களால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மதுரை செல்லூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தியாகபிரியன் என்பவர், இதுபோன்று போதைக்கு அடிமையாகி குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கம் பட சூர்யா போல் மிரட்டல் எச்சரிக்கை ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அந்த ஆடியோவில் “ ஒரு அண்ணனாக சொல்கின்றேன். தேவையற்ற வேலைகளை நிறுத்தவும், இல்லாவிட்டால் சிங்கத்தின் அசூரவேட்டை தொடரும், அப்துல்கலாமின் கனவான 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை நிரூபிக்க போதைகளை தூக்கி எரிந்து நல்வழியில் செல்ல வேண்டும்.
இதுவரை பொறுமையாக இருந்தேன். இனி இருக்கமாட்டேன். என போதைக்கு அடிமையாக உள்ளவர்களை எஸ்.ஐ எச்சரித்து பேசிய வாட்ஸ்ஆப் ஆடியோ வெளியிட்டுள்ளார்