கரும்பு சாறு பொங்கல்
1.*கரும்பு சாறு பொங்கல்
* ****************************** தேவையானவை:-
3 வகை சிறு தானியங்கள் – 1கப் பாசி பருப்பு -1 கப் கரும்பு சர்க்கரை – 2 கப் முந்திரிப்பருப்பு – 10 உலர் திராட்சை -10 ஏலக்காய் -3 நெய் -50மிலி கரும்பு சாறு -3 கப் குங்கும பூ-ஒரு சிட்டிகை
செய்முறை :- பாசி பருப்பு மற்றும் சிறு தானியத்தை தனி தனியாக சிவக்க வறுத்து கொள்ளவும் . ஏலக்காய் , முந்திரி திராட்சையை நெய்யில். வறுத்து கொள்ளவும். குக்கரில் வறுத்த பருப்பு சிறு தானியத்திற்கு 1 க்கு 3 -(1:3 ), கரும்பு சாறு தண்ணீர் சேர்த்து அத்துடன் கரும்பு சர்க்கரை , அனைத்தையும் ஒன்றாக கலந்து மிதமான தீயில் கட்டி சேராமல் கிளரி 3 விசில் வரும் வரை வேக விடவும் . பின் இதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும். நிறைவாக குங்குமப்பூ , மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை அடி பிடிக்காமல் கிளறி இறக்கவும். சுவையுடன் கூடிய சத்தான பொங்கல் ரெடி
. மஞ்சுளா யுகேஷ்