பத்மஸ்ரீ யோகா பாட்டி நானாம்மாள் காலமானார்
99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையில் கூட விடாமல் யோகா செய்து வந்த உலகப்புகழ் பெற்ற யோகா பாட்டி கோவை நானம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்த நானாம்மா விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடம் சிறிய வயதிலேயே யோகாசனப் பயிற்சிகளை கற்றுக்கொண்டு கடைபிடித்தார்.
நானாம்மாளின் கணவர் சித்தவைத்தியர் இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். யான் பெற்ற இன்பம், உடல்நலம் வைகயகமும் பெற வேண்டும் என்று சுமார் 600க்கும் மேற்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி அடைந்திருக்கிறார்கள். இவர்களின் மாணவர்கள் சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என பல்வேறு நாடுகளில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
குடியரசு தலைவரின் கைகளில் பெண்சக்தி விருதும், 2018 ம் ஆண்டின் பத்மஸ்ரீ விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.