அம்மா யானையின் மடியில் குட்டி யானை

 அம்மா யானையின் மடியில் குட்டி யானை

இணையத்தில் ஒரு யானை வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது..

இதை பார்த்த பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.. அப்படித்தான், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில், சமீபகாலமாகவே, நிறைய வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.. பக்கத்திலிருக்கும் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, திடீரென எஸ்டேட் பகுதிகளுக்குள் இந்த விலங்குகள் புகுந்து விடுகின்றன.

இப்படித்தான், 2 நாளைக்கு முன்பு, வால்பாறை பகுதியிலுள்ள பன்னிமேடு என்ற இடத்தில் ஒரு குட்டியானை சுற்றித்திரிந்துள்ளது.. தன்னுடைய அம்மாவை பிரிந்து, இந்த குட்டியானை அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வருவதாகவும், தாயை காணாமல் தவித்து வருவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

குட்டி யானை: உடனே வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.. இந்த குட்டியானை பிறந்து, 4 மாதமாகியிருக்குமாம்.. யானை கூட்டத்துடன் வரும்போது, தன்னுடைய தாயை தவறுதலாக பிரிந்து வந்துவிட்டிருக்கலாம் என்கிறார்கள்.

அம்மாவை காணாமல், குட்டி யானை இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்ததாம்.. தவிப்பில் ஒருவிதமான சத்தத்தையும் எழுப்பி கொண்டேயிருந்ததாம்.. இறுதியில் குட்டி யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், சாப்பாடும், தண்ணீரும் தந்தனர். வனப்பகுதி: பிறகு, குட்டி யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க, ஆற்று நீரில் குளித்து வைத்தனர்.. அதற்கு பிறகு, குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று, யானை கூட்டத்தை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பையும் மேற்கொண்டனர். இறுதியில், தாய் யானையையும் கண்டுபிடித்துவிட்டார்கள். இதையடுத்து, குட்டியானையை, அதன் தாயிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக, ஒரு வாகனம் ஏற்பாடு செய்தனர்.. அதில், இந்த குட்டியானையை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.. கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தாய் யானை கூட்டத்தில் இந்த குட்டியானையை சேர்த்தார்கள்.. குட்டியின் சப்தத்தை கேட்டதுமே, மொத்தம் 11 யானைகள் மொத்தமாக ஓடி வந்தனவாம்.. 11 யானைகள் ஒன்றாக வருவதை பார்த்து வனத்துறையினர் பயந்துவிட்டார்களாம்.

தும்பிக்கை: ஆனால், குட்டியின் தும்பிக்கையை பிடித்து, தாய் யானை தரதரவென இழுத்து சென்றதுமே, மற்ற யானைகளும் அமைதியாகி பின்னாடியே செல்ல ஆரம்பித்துவிட்டனவாம். அம்மாவை காணாமல் அதுவரை தவித்து கொண்டிருந்த குட்டியானை, தாயை பார்த்த குஷியில் துள்ளியது.. மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் சேர்ந்துகொண்டது.. இதற்கெல்லாம் முக்கிய உதவியாக இருந்தது ‘ட்ரோன்’ கேமராக்கள்தானாம்.. ட்ரோன் கேமரா இல்லாவிட்டால், தாய் யானையை கண்டுபிடித்திருக்கவே முடியாது என்கிறார்கள் வனத்துறையினர். குட்டி யானை: தாயிடம் குட்டியை சேர்த்துவிட்டாலும்கூட, வனத்துறையினர் இந்த யானை கூட்டத்தை, தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கிறார்கள். தாயும் – சேயும் சவுக்கியமாக இருக்கிறார்களாம்.. நேற்றுகூட கண்காணிப்பில் ஈடுபட்டபோது, குட்டியானையை வீடியோ எடுத்தார்கள்.. தனியார் டீ எஸ்டேட் ஒன்றில், அம்மா யானையின் மடியில், அந்த குட்டி யானை படுத்து கொண்டிருந்தது.. நீண்ட நேரமாக, குட்டி யானை நன்றாக தூங்கியது.. நீண்ட நேரம் தாயின் மடியில் ஓய்வு எடுத்தது

.. தாயை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீண்டும் தாயுடன் சேர்த்து வைத்ததுமில்லாமல், மடியில் படுத்து குட்டி யானை தூங்கும் வீடியோவையும் வனத்துறையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/heart-touching-incident-in-coimbatore-and-baby-elephant-sleeping-on-mothers-embrace-near-pollachi-va-571799.html?story=3

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...