விண்டோஸ் 10 – உலகின் மிக அதிகமாக இயங்குதளம்!

 விண்டோஸ் 10 – உலகின் மிக அதிகமாக இயங்குதளம்!

விண்டோஸ் இயங்குதளமானது 1, 2 மற்றும் 3 என முதலில் அறியப்பட்டாலும் விண்டோஸ் 3ம் பதிப்பு மட்டுமே கொஞ்சம் பிரபலமடைந்தது. இன்றைய உபயோகத்தின் முன்னோடியாக மூன்றாம் பதிப்பின் பின்தான் உபயோகத்திற்கு வந்தது. அப்போது கணினியின் விலை கிட்டத்தட்ட 80,000ஃ- க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 


அதன் பிறகு விண்டோஸ் 95 24-08-1995 ஆம் தேதி, மிக கோலமான விளம்பரத்துடன் வெளியிட்டது மைக்ரோசா|ப்ட். ஒட்டுமொத்த கணினித் துறையை கைப்பற்றியது இந்த இயங்குதளம்தான். அதன்பிறகு விண்டோஸ்-98, விண்டோஸ்-2000, விண்டோஸ் மில்லினியம், விண்டோஸ் எக்ஸ்பி, 24-08-2001 ஆம் தேதி வெளியிடப்பட்ட எக்ஸ்பி, கிட்டதட்ட 10 வருடங்கள் தனது கட்டுபாட்டில் வைத்திருந்தது. எக்ஸ்பிக்கு தொழில்நுட்ப உதவியை நிறுத்தியிருந்தாலும் இன்னும் பலர் எக்ஸ்பியை உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


விண்டோஸ்-2003 சர்வர், அதற்குப்பிறகு விண்டோஸ் விஸ்டா வெளி வந்தது. அது நிறைய சிக்கல்களையும் உபயோக சிரமங்களையும் கொடுத்ததால் மிக அவசர அவசரமாக வெளியிட்டதுதான் விண்டோஸ் 7 இன்றும் பெரும் பகுதியை தன் கைவசம் வைத்திருக்கிறது விண்டோஸ் 7.


அடுத்ததாக விண்டோஸ் 8 வெளியிட்டது. அதில் ஸ்ட்ராட் பட்டன் இல்லாமல் வெளியிட்டதால் அது உபயோகிப்பாளர்களுக்கு பிடிக்கவில்லை. விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. உடனே சுதாரித்த மைக்ரோசா|ப்ட் விண்டோஸ் 8.1 என்ற பதிப்பபை ஸ்ட்ராட் பட்டன் இணைத்து வெளியிட்டது. அது ஒரளவு நிவர்த்தி செய்தது.


அடுத்ததாக விண்டோஸ் 10 இன்று அதன் விரிவாக்கம் வளர்ந்து கொண்டே இருக்கிறது அடுத்தடுத்த காலத்திற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் மிக கோலாகலமாக கண்டுபிடித்திருப்பது மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்த இயங்கு தளம் டேப் கருவிக்கான இயங்கு தளமாக இருக்க வேண்டும் என்று, இருவகை பயன் பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது மைக்ரோசா|ப்ட் நிறுவனத்தின் இயங்குதளமான விண்டோஸ் 10 ஐ உலகம் முழுவதிலும் 90 கோடி சாதனங்களில் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், கடந்த செப்டம்பர் 2018ல் 70 கோடி சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில், அந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 80 கோடியாகவும், இந்த செப்டம்பரில் 90 கோடியாகவும் அதிகரித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் மட்டும் விண்டோஸ் 10 இயங்குதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடி அளவிற்கு கணிசமாக அதிகரித்துள்ளது. 


கடந்த 2015ம் ஆண்டில் வெளியான விண்டோஸ் 10 இயங்கு தளத்தை உலகம் முழுவதிலும் உள்ள 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட சாதனங்களில் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டிற்குள் 100 கோடி சாதனங்களில் பயன்படுத்தும் இலக்கை எட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம்  திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


விண்டோஸ் 10 இயங்குதளத்தின் சந்தைமதிப்பு கடந்த ஜூலை மாதத்தில் 48.86 சதவீதமாக இருந்தநிலையில் 2.13 சதவீதம் கூடுதல் சந்தை மதிப்பை ஆகஸ்டு மாதத்தில் பெற்றது. இதன்மூலம் 50.99 சதவீதம் சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது விண்டோஸ் 10 இயங்குதளம். எனினும் இந்த வளர்ச்சி, விண்டோஸ் 10ன் இலவச அப்க்ரேடுகள் 2016ம் ஆண்டு நிறுத்தப்பட்ட பின் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


விண்டோஸ் 8 இயங்குதளமானது 0.63 சதவீதம் சந்தை மதிப்பை வைத்திருக்கும் நிலையில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தின் மதிப்பு 0.91 புள்ளிகள் குறைந்து 4.20 சதவீதமாக இருக்கிறது. இரண்டையும் சேர்த்து 4.83 சதவீத சந்தை மதிப்பை ஆகஸ்டு மாத இறுதியில் வைத்திருந்தது.


உபுண்டு, லினக்ஸ், க்ரோம் ஓஎஸ், ஐஓஎஸ் உள்ளிட்ட பல இயங்குதளங்கள் கணிணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான கணினிகளின் இயங்குதளங்களாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளே இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த விண்டோஸ் 31-10-1990 ம் தேதி முதல் தற்போது வரை கிட்டதட்ட 29 வருடங்கள் தன் கட்டுபட்டில் வைத்திருக்கிறது. இதற்கு மற்று கண்பிடிப்பு இன்னும் தொடங்கக் கூட இல்லை என்பது தான் உண்மை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...