நீரோ மன்னன்
நீரோ மன்னன் பிறந்த தினம் இன்று...
நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் (Nero Claudius Caesar Augustus Germanicus; டிசம்பர் 15, கிபி 37 – ஜூன் 9, கிபி 68),, என்பவன் ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் ஆவான்.
நீரோ அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான்.
நீரோ 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு (58–63) ஆகியவை முக்கியமானவை.
கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான்.