இன்றைய ராசி பலன்கள் ( 10 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை 2023 )

 இன்றைய ராசி பலன்கள் ( 10 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 10ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றம் தாமதமாக ஏற்படும். இதனால் கவலை ஏற்படும். பயணங்கள் ஆறுதல் அளிக்கும். பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது. பணிகளில் தவறுகள் நேரலாம். உங்கள் செயல்திறனைக் கண்டு மேலதிகாரிகள் அதிருப்தி அடைவார்கள். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம். பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உங்கள் சமயோசித புத்தி மூலம் வெற்றி காண்பீர்கள். உங்கள் செயல்திறன் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நீங்கள் விரைந்து பணிகளை முடிப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும்.காப்பீடு அல்லது பூர்வீக சொத்து வகையில் பண வரவு காணப்படும். உங்களின் திருப்தியான மன நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று உங்கள் விருப்பங்கள் மற்றும் இலக்குகளில் வெற்றி பெறுவதற்கு உகந்த நாள். புதிய தொடர்புகளை இன்று நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது கவனமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற இயலும். நிதிநிலைமை இன்று பிரகாசமாக இருக்கும்.பணத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். உங்களின் உறுதியான மன நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

முக்கிய விஷயங்களை இன்று தொடங்குவதற்கு உகந்த நாள் அல்ல. இன்று அமைதியின்மையும் பாதுகாப்பின்மை உணர்வும் காணப்படும். பிறருடன் பேசும் போது கவனம் சேவை. பிரார்த்தனை மூலம் அமைதி பெறலாம். இன்று பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. திறமையாக பணியாற்ற திட்ட்டமிட வேண்டியது அவசியம். பொறுப்புகள் அதிகமாக காணப்படும். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று உணர்ச்சிவசப்பட நேரலாம். இதனால் தன்னம்பிக்கை இழக்க நேரிடும். இதயம் கனப்பதாக உணர்வீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு பணம் கரையும். இன்று பணத்தை சேமிக்க இயலாது. உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் செய்ய இயலாது. இதனால் கவலை ஏற்படும். சக பணியாளர்களுடனான உறவு முறை சிறப்பாக இருக்காது.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் அக்கம்பக்கதினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். முக்கிய முடிவுகள் இன்று நல்ல பலனளிக்கும். உங்கள் செயல் திறனுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்களின் அபாரமான திறமையைக் கண்டு சக பணியாளர்கள் ஆச்சரியப்படுவார்கள். இன்று பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. கடவுள் அருளால் இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வலிமையுடன் இருப்பீர்கள்.

துலா ராசி அன்பர்களே!

இன்று வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம். எளிதில் வெற்றி காண்பதை கடினமாக உணரவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணிச்சுமை உங்களுக்கு கவலையை அளிக்கும். பாதுக்கப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். இதனால் பணிகளை திறமையாக செயல்படுத்த இயலாது. நிதிநிலை திருப்திகரமாக இருக்காது. உங்களின் நெருங்கிய நபர் ஒருவருடைய உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். அதனை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். இன்று செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று திருப்தி குறைந்து காணப்படும். கவனமாக திட்டமிட்டால் வெற்றி பெறலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். பணியிடச் சூழல் கடினமாக இருக்கும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. தாமதங்களை தவிர்க்க முறையாக திட்டமிட வேண்டும். அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக பண இழப்பு நேரலாம். மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று மந்த நிலையும் பாதுகாப்பின்மை உணர்வும் காணப்படும்.ஆன்மீக ஈடுபாடு திருப்தியை அளிக்கும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. பணிகளை ஒப்படைக்கும் முன்பு சரிபார்த்து தருவது சிறந்தது. பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பது கடினமாக உணர்வீர்கள். இன்று அதிகமாக சேமிக்கவும் இயலாது. இன்று ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

இன்று வளர்ச்சி காணப்படும். உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கை மூலம் இலக்கில் வெற்றி பெறுவீர்கள். ஸ்திரமான முடிவுகள் வெற்றிக்கு வழி வகுக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் நேர்மையான முயற்சி உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். உங்களின் கடின உழைப்பிற்காக ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் இன்று கூடுதல் பண வரவு காணப்படும். இன்று ஆற்றல் நிறைந்து காணப்படுவீர்கள்.

கும்பராசி அன்பர்களே!

இன்று அபாரமான நாள். உங்கள் இனிமையான வார்த்தை உங்கள் நெருங்கிய உறவுகளை மகிழ்ச்சி யுறச் செய்யும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியில் உங்கள் செயல்திறன் அபாரமாக இருக்கும். சக பணியாளர்களுக்கு நீங்கள் உதாரணமாக இருப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். நிதிநிலை சுதந்திரமாக் இருக்கும். நீங்கள் தேக ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மீனராசி அன்பர்களே!

இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். இது உங்கள் மகிழ்ச்சியைக் குறைக்கும். உங்கள் வளர்ச்சியில் தாமதங்கள் காணப்படும். விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்கவும். பணிகளை மேற்கொள்ளும் போது திட்டமிட வேண்டும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். வெற்றி பெறுவதற்கு திறமையாக கையாள வேண்டும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். சேமிப்பதில் கட்டுப்பாடு காணப்படும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...