இன்றைய ராசி பலன்கள் ( 04 டிசம்பர் திங்கட்கிழமை 2023 )

 இன்றைய ராசி பலன்கள் ( 04 டிசம்பர் திங்கட்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் டிசம்பர் 04ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. இன்று சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். கூடுதல் பணிகள் காரணமாக குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. பணிகளின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடும் சூழல் ஏற்படும். இதனால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். சமூக கூட்டங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்வீர்கள். வெற்றிகரமான பலன்களைக் காண கடினமாக உழைக்க வேண்டும். சில பணிகள் முடிக்க முடியாமல் நிலுவையில் வைக்க வாய்ப்புள்ளது. இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். கடன் வாங்க நேரலாம். மன உளைச்சல் காரணமாக தோள் வலி ஏற்படலாம்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். தைரியம் மற்றும் உறுதி கொண்டால் நன்மை கிடைக்கும். இன்று மொத்தத்தில் வளர்ச்சி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் புத்துணர்ச்சியோடு வேலையை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று நிதிநிலைமை சாதகமாக இருக்கும். இன்று அதிர்ஷ்டமான நாள். பண வரவு காணப்படும். உங்கள் மன வலிமை காரணமாக இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் உற்சாகத்துடன் இருக்க வேண்டும். அதிக சிந்தனைகளை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதி காணலாம். அதிக பணிகள் காரணமாக பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் பொறுப்புகளை ஆற்றும் போது கவனமாக ஆற்ற வேண்டும். அஜாக்கிரதை காரணமாக பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பது நல்லது. இன்று தெளிந்த மனதுடன் இருந்தால் உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கலாம். இன்று பணிகள் இறுக்கமாக காணப்படும். பனியின் போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இன்று தேவையற்ற செலவினங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். இன்று முதுகுவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் செயல்கள் சுமுகமாக நடக்க அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நம்பிக்கை இழப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். அதிக பணிகளை சந்திக்க நேரும். உங்கள் சக பணியாளர்களுடன் சகஜமாகப் பழகவும். நிதிநிலைமை சீராக இருக்காது. இன்றைய செலவினங்களை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலா ராசி அன்பர்களே!

இன்று மகிழ்ச்சியளிக்கத்தக்க வகையில் வளர்ச்சி காணப்படும். உங்களிடம் எதிர்காலத்தைப் பற்றிய பரந்த நோக்கு காணப்படும். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைய கடினமாக உழைப்பீர்கள். உங்கள் வழியில் வரும் தடைகளை தகர்த்தெறிவீர்கள். நீங்கள் பலனை அதிகம் எதிர்பார்க்காமல் பணியாற்றுவீர்கள். இதனால் குறித்தநேரத்தில் பணிகளை ஆற்றுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டையும் ஆதரவையும் பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று சுமுகமான பலன்கள் காணப்படும். உங்கள் லட்சியங்களை அடைய இந்நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் உறுதியானது. இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். இன்று பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இருக்காது.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். புதிய மனிதர்களின் தொடர்பும் அதனால் நல்ல பயனும் கிடைக்கும். இதனால் உங்கள் தொடர்பு வட்டம் விரிவடையும். வாழ்க்கை உங்களுக்கு கவர்ச்சிகரமாக இருக்கும். கூடுதல் பணிகள் காரணமாக இன்று நீங்கள் பணியில் மும்மரமாக இருப்பீர்கள். நிதியைப் பொறுத்தவரை இன்று சுமாரான நாள்.

மகர ராசி அன்பர்களே!

இன்று காணப்படும் கடினமான சூழல் காரணமாக தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் இந்தச் சூழ்நிலைகளை ஜெயிக்கலாம். பிரார்த்தனை நல்ல பலன் தரும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணியில் தாமதங்கள் காணப்படும். இன்று பண இழப்பு ஏற்படலாம். உங்களின் பிரியமான ஒருவரின் உடல் நிலைக்காக பணம் செலவு செய்ய நேரும். தோல் சம்பந்தமான ஒவ்வாமை காணப்படும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று மகிழ்ச்சி அலை வீசும். முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். உங்களின் தனித்தன்மைக்கான பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். புதிய முதலீடுகளுக்கு திட்டமிடலாம். இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படும்.

மீனராசி அன்பர்களே!

இன்று விரும்பிய பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் வகையில் பயனுள்ள திட்டங்களை தீட்டுங்கள். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். பல நன்மைகளை அடைவதற்கான சாத்தியம் உள்ளது. பண வரவு சாதகமாக உள்ளது. உங்களின் சேமிக்கும் ஆற்றல் உயரும், இதனால் பொருளாதார பாதுகாப்பு காணப்படும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...