ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது.

 ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது.

 ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது.


 கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.

மனு தாக்கல் நிறைவு; இன்று பரிசீலனை- சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்!

இந்தக் கூட்டத்தில் இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைப்பது, இந்தி மொழி திணிப்பிற்கு கண்டனம், பொருளாதார விஷயத்தில் பாஜகவிற்கு கண்டனம், ப.சிதம்பரம் கைதிற்கு கண்டனம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பேசிய கே.எஸ்.அழகிரி, இந்தியாவில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணிக்க முடியாது. ஏனெனில் இது பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட நாடு.

காஷ்மீர் விவகாரத்தில் நேருவை குற்றம்சாட்டுவது தவறு. இந்தியாவோடு காஷ்மீர் இணைவதற்கு நேரு தான் காரணம். அதேசமயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படாததற்கு அவர் காரணம் அல்ல.

சிங்கப்பூர், தெலங்கானா அளவுக்கு தமிழ்நாட்டுல இல்ல… டெங்கு பாதிப்புக்கு சமாதானம் சொன்ன அமைச்சர் !!

பாஜக தலைமையின் அடியாள் போன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்படுகிறார். இவர் பொருளாதாரத்தில் நிபுணர் அல்ல. வரும் இடைத்தேர்தல் வெற்றி நமக்கு மிக முக்கியம்.

இதற்காக நாம் கடுமையாக போராட வேண்டும். இந்த தேர்தலில் அதிமுக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யும். ஆனால் அவ்வாறு செலவு செய்ய காங்கிரஸ் கட்சியிடம் ஒரு பைசா கூட இல்லை.

ஆகையால் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கடின உழைப்பை செலுத்தினால் தான், இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கே.எஸ்.அழகிரி கூறினா

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...