தமிழக விவசாயிகள் – மகிழ்ச்சியான செய்தி
அன்பான தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டம்.. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது அனைவரும் தெரிந்த விஷயம்… ஏற்கனவே ஒரு சிலருகக்கு இரண்டு முதல் 3 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது.
இனி..விவசாயிகள் 3 தவணைகளில் வருடம் ரூ 6000 ஆயிரம் பெறும் அந்த திட்டமானது தற்போது விவசாயிகள் அனைவரும் பெற ஆன்லைன் மூலம் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுவரை வருடம் Rs6000 ரூபாய் நிதி உதவி திட்டத்தில் பதிவு செய்ய செய்யாத விவசாயிகள் ஆன்லைன் அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி ஆன்லைன் மூலம் விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்..
அப்போது விவசாயிகள் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் உங்களுடைய 1.ஆதார் கார்டு, 2.வங்கி கணக்கு புத்தகம், 3.நிலம் குறித்த சிட்டா.. 4.மொபைல் எண் (5. ரேசன் கார்டு 6.pan card ) இந்த நான்கையும் கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.
மேலும் ஏற்கனவே முதல் முறை பணம் வாங்கி இரண்டு மற்றும் மூன்றாவது தவணை கிடைக்கப் பெறாத விவசாயிகள் ஆன்லைன் மூலம் என்ன காரணத்திற்காக தவணை தொகை நமக்கு கிடைக்கவில்லை என்ற விஷயத்தையும் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம் இதில் பல விவசாயிகளுக்கு ஆதார் கார்டில் உள்ள பெயரும்.. வங்கி கணக்கு வைத்துள்ள பெயர் வித்தியாசம் என பல்வேறு காரணங்களால் பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனை திருத்தம் செய்துகொள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.அதை ஆன்லைன் மூலமாகவே சரி செய்து கொள்ளலாம்.