இன்றைய ராசி பலன்கள் ( 27 நவம்பர் திங்கட்கிழமை 2023 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 27ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று ஆன்மீக சிந்தனையுடன்காணப்படுவீர்கள். அதைப்பற்றி பேசுவீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். இன்று பணிச்சூழல் நன்றாக காணப்படும். உங்கள் சகபணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண வரவு மிதமாக இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்றைய தினம் சவால்கள் நிறைந்;ததாக காணப்படும். உங்களிடம் ஈகோ பிரச்சினை காணப்படும். இது உங்கள் மேன்மைக்கு உகந்ததல்ல. பணியிடத்தில் உங்கள் சகபணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் உங்கள் மனதில் குழப்பங்கள் உண்டாகும். பணியில் தொய்வு ஏற்படும். இன்று மிதமான பணவரவு காணப்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

இது ஒரு மந்தமான நாள். ஆனால் உங்கள் முன்னேற்றத்தில் கவனத்துடன் இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் முன்னேற்றப் பாதையில் தடைகள் காணப்படும். சிந்தித்து அறிவுப்பூர்வமாக செயல்படுவது நல்லது. நீங்கள் உறுதியுடனும் எளிதாகவும் பணியாற்றுவீர்கள். இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை.

கடக ராசி அன்பர்களே!

இன்று சரியான முடிவுகளை எடுப்பீர்கள் அது உங்களுக்கு முடிவில் மகிழ்ச்சியைத் தரும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். பணியை பட்டியலிட்டு அட்டவணைப்படுத்தி செயலாற்றுங்கள். நிதிவளர்ச்சி இன்று அபாரமாக காணப்படுகின்றது. இன்று மகிழ்ச்சியின் காரணமாக முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

நிறைய மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இன்று ஆன்மீக விஷயங்களில் உங்கள் மனம் லயிக்கும். நீங்கள் பணிகளை சாதாரணமாக மேற்கொண்டு நல்ல முறையில் முடித்துவிடுவீர்கள். பணவரவிற்கான அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுகின்றது. கூடுதல் செலவினங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பிரார்த்தனையில் ஈடுபடலாம். ஆன்மீக விஷயங்களில் ஈடுபடலாம். கவனக் குறைவின் காரணமாக சில சமயங்களில் நீங்கள் மேற்கொண்ட பணிகளில் உங்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். இன்று பலன்கள் கலந்து காணப்படும்.வரவும்செலவும் சேர்ந்தே காணப்படும்.

துலா ராசி அன்பர்களே!

இது ஒரு மந்தமான நாளாக இருக்கும். உங்களுக்கு இன்று நல்லது எது கெட்டது எது என பிரித்தறிய இயலாது. அதிர்ஷ்டத்தை நம்பியிருக்காதீர்கள். உங்கள் கடின உழைப்புதான் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணிச் சுமை அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். நிதிவளர்ச்சி நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. பணத்தை தக்க வைத்துக் கொள்வது இன்று கடினமாக இருக்ககும். இன்று மிதமான ஆரோக்கியமே காணப்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இன்று நன்றாக பணியாற்றுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் திறமை வெகுவாக பாராட்டப்படும். இன்று நிதிவளர்ச்சி அபாரமாக காணப்படும். ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று மிக நல்ல நாள். சிறிய முயற்சியிலேயே பெரிய வெற்றியைக் காண்பீர்கள். இன்று உங்கள் செயல்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் நன்றாக பணியாற்றுவீர்கள். ஆனால் உங்கள் சக பணியாளர்கள் அல்லது உங்களின் கீழ் பணிபுரிவோரிடத்தில் கருத்து வேறுபாடுகளை உண்டாகலாம். எதிர்பாராத பணவரவு காணப்படும். இன்று ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

உங்கள் சமயோஜித புத்தியின் மூலம்; உங்கள் நண்பர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். உங்கள் பணிகளைக் கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. வரவும் செலவும் இணைந்து காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் காணப்படாது.

கும்பராசி அன்பர்களே!

இன்று மனஅழுத்தம் மற்றும் அசௌகரியங்கள் காணப்படும். கவனமாக திட்டமிட்டு இன்றைய தினத்தை நிர்வகிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பணியைப் பொறுத்தவரை இன்று நல்ல நிலை காணப்படும். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வரவும் செலவும் இணைந்து காணப்படும். வரவை விட செலவுகள் அதிகமாக காணப்படும். இன்று சராசரி ஆரோக்கியம் காணப்படும்.

மீனராசி அன்பர்களே!

உங்கள் செயல்களுக்கு நல்ல பலன்கள்கிடைக்கும். இன்று நீங்கள் உங்களின் சொந்த முடிவு எடுப்பதில் உறுதி காட்டுவீர்கள். எளிதான பணிகள் கூட இன்று சுமையாகத் தெரியும். புத்திசாலித்தனத்துடன் நடந்து உங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். இன்று நிதி வளர்ச்சி சீராக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!