செல்லிடப்பேசி – வரமா? சாபமா?
செல்லிடப்பேசி – வரமா? சாபமா?
இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஒரு பொருளாகி விட்டது. இந்த செல்லிடப்பேசி இல்லாத நபர்களை பார்த்தால்தான் அதிசயமும் ஆச்சரியமாக தோன்றும் அப்படி ஒரு விஞ்ஞான வளர்ச்சி அந்த காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த செல்லிடப்பேசியின்
சாதனை – உலகத்தை கைக்குள் அடக்கியது
சோதனை – உலகத்தையே தனக்குள் அடக்கியது
இன்று நிறைய நிறைய தேவைகளையும் புதிய புதிய பரிமாணங்களையும் தொட்டிருக்கிறது. ஒரு நிமிடத்தில் காணொளி அழைப்பில் நேரடியாக முகம் பார்த்து பேசி விடுவது சாத்தியம் என்றால், நிச்சயம் அது செல்லிடப்பேசி தான்.
தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட சூழ்நிலையில் செல்லிடப்பேசி இல்லாத ஒரு உலகத்தை நினைத்து பார்த்தாலே சற்று பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு செய்தி தொடர்பில், ஒரு இமாலய வளர்ச்சி பெற்றிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் வெறும் ஒளி அழைப்பு மட்டுமே உபயோக படுத்திக்கொண்டிருந்த, இந்த செல்லிடப்பேசி, தற்பொழுது அனைத்து விதமான வசதிகளுடன் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
அதிலும் ஆண்ட்ராய்டு என்று சொல்லக்கூடிய செல்லிடப்பேசி அனைத்து விதமான விஷயங்களுக்கும் செயலிகள் வந்துவிட்டன. வங்கி பரிமாற்றம், லோன் கணக்கு, உடனுக்குடன் செய்திகள் இணையதளம், தொலைக்காட்சி, ஊடகங்கள் போன்றவை இப்பொழுது செல்லிடப்பேசியில் வந்துவிட்டன. எங்கிருந்தாலும் மின்னஞ்சலும் இணையதளமும் சாத்தியமாயிற்று.
சென்ற நூற்றாண்டில் பத்தாவது படித்த உடன், தட்டச்சு பயில்வதற்காக செல்வார்கள். அது இந்த நூற்றாண்டு பிறந்த உடனேயே குறைய ஆரம்பித்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் இந்த செல்லிடப்பேசி என்று ஒரு காரணம் என்றால், அதுதான் உண்மை என்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேசினால் தட்டச்சு செய்யக்கூடிய விஞ்ஞான தொழில்நுட்பம் அறிமுகமாகி, அந்த தட்டச்சு செய்ய வேண்டிய வேலையை மிக எளிதாகி விட்டது. கணனியில் தட்டச்சு செய்தால் அரை மணி நேரம் ஆகலாம். ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு பக்கத்தையே ஐந்து நிமிடங்களில் தட்டச்சு செய்ய முடிகிறது.
இப்படி அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சியும் இதை அதிகரித்துக் கொண்டே போகிறது. எந்த நேரத்திலும் பணத்தை பரிமாற்றம் செய்யும் வசதியும் அதன் தேவையும் உபயோகமும் அதிகமாகிவிட்டது. அது தற்போது உள்ள நேரத்தை மிகவும் மிச்சப்படுத்துகிறது. என்றாலும் சில எதிர்பாராத சூழ்நிலைகளில் நெட்ஒர்க் அலைவரிசையில் சரியில்லாத போது, அது சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
தற்பொழுது செல்லிடப்பேசி இல்லாதவர்களை காண்பது மிகவும் அரிது தான். அப்படி ஒரு சிலர் இருந்தால் அதில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அலைபேசி இல்லாமல் ஒரு மனிதரா என்று வியக்கும் வண்ணம், அதன் பரிமாண வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. சோசியல் மீடியா என்ற சொல்லக்கூடிய சமூக ஊடகங்கள் இதில் பெருகிவிட்டது. எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அனைவருடன் இணைப்பில் இருப்பது மிகப் பெரிய சாத்தியமான ஒரு விஷயமாக இருக்கிறது.
இது நிறைய வசதிகள் இருந்தாலும் சில சங்கடங்களும் இருக்கின்றன ஏதாவது முக்கியமாக அலுவலர்கள் இருக்கும் பொழுது அல்லது உறவினர்கள் வந்து இருக்கும் பொழுதும் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதும் செல்லிடப்பேசி ஒலிக்கும் பொழுது ஏற்படுகின்ற சங்கடமும் இடையூறுகளும் தாண்டி வர வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு செல்பேசி நிச்சயம் இருக்கிறது. ஒவ்வொருக்கும் தனி எண் இருக்கிறது என்பதுதான் ஆதார பூர்வமான உண்மை. இதில் நிறைய நன்மைகள் இருந்தாலும் சில சங்கடங்களும் சில தீமைகளும் இருக்கின்றன. தணிக்கை செய்யப்படாத சில விஷயங்கள் இதை வந்து சங்கடத்துக்கு உள்ளாக்கும்.
அது உண்மை என்றாலும் தீப்பெட்டி போன்றுதான் அளவாக எரித்தால் சமையலுக்கு உபயோகிக்கலாம். அளவு அதிகமாக எரித்தால் வீட்டையே அழித்து என்பது போன்றதுதான். எதுவுமே ஒரு சுய கட்டுப்பாடு வேண்டும். தேவை கருதி மட்டுமே உபயோகப் படுத்தினால் நிச்சயமாக இது வரமாக இருக்கும் இல்லை என்று நிச்சயம் செல்லிடப்பேசி ஒரு சாபம் தான்…