காது கொடுத்துக் கேட்போம்: இன்று உலக காது கேளாதோர் தினம்

 காது கொடுத்துக் கேட்போம்: இன்று உலக காது கேளாதோர் தினம்

மாற்றம் செய்த நாள்: செப் 25,2016 

ஒலியை உணர்வதற்கு காதுகள் மிக அவசியம். இதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை. உலகளவில் 36 கோடி பேர் இப்பிரச்னையால் தவிக்கின்றனர். சமூகத்தில் இவர்

களுக்கு உரிய வசதிகள் செய்து தர வலியுறுத்தி செப்., 25ல்(கடைசி ஞாயிறு), உலக காது கேளாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தை உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ல் உருவாக்கியது. முழுமையாகவோ, பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகிறார். சிலர் நாம் சொல்வதை திரும்ப திரும்ப கேட்பார்கள். 

அப்படியெனில் அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இளைஞர்களின் காது கேட்கும் திறன் சாதாரணமாக 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை உள்ளது.

காரணங்கள் :-

அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கிறது. உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின் குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி, தொண்டை வலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போகலாம்.

குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால் உடனே டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத்திறனை பாதிக்கும். அலைபேசி கதிர்வீச்சு காரணமாக கூட கேட்கும் திறன் பாதிக்கப்படலாம்.இதை செய்யாதீர்கள் காதில் அழுக்கை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் குச்சியை பயன்படுத்துவது, எண்ணெய் ஊற்றுவது, கேட்கும் திறனை பாதிக்கும். இதற்கு பதிலாக அதற்கென தயாரிக்கப்பட்டுள்ள ‘பஞ்ச்’ உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளை பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.கருவிகள் தற்போது அறிவியல் வளர்ச்சியால் ‘புரோகிராம்’ செய்யப்பட்ட காது கேட்கும் கருவிகள் வந்து விட்டன. இதை ‘ஹெட் போன்’ போல மாற்றிக் கொள்ள முடியாது. இதற்கு சில காலம் பயற்சி பெற வேண்டும். 

ஈ.என்.டி., டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இதனை பொருத்திக் கொள்ளலாம். காது கேளாதவர்களின் கேட்கும் திறனை பொறுத்து, இக்கருவியின் ஒலி அளவு நிர்ணயிக்கப் படுகிறது. இது நிரந்தரமாக காது கேளாமை பிரச்னையை தீர்க்காது. காது கேட்பதற்கு இக்கருவி உதவும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...