பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு

 பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு

பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு

மெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியுறவு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இம்ரான் கான் பதிலளித்து பேசுகையில்:

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது அரசு தேர்தல் முடியும் வரை காத்திருந்தது. ஆனால் அதன்பின் இந்தியா எங்களை நிதி நடவடிக்கை செயல் குழுவின் கருப்பு பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருவது தெரியவந்தது.

ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள், சிம்லா ஒப்பந்தம் மற்றும் தன் சொந்த அரசியலமைப்பை இந்தியா மீறியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கும்படி சர்வதேச சமூகம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் அது காஷ்மீர் மக்களுக்கு செய்யக்கூடிய சிறிய உதவியாக இருக்கும் என இம்ரான் கான் தெரிவித்தார்.

மிக பெரிய தவறு

பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடு என அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் கூறியது தொடர்பாக இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பாகிஸ்தான் ஏன் தனிமைப்படுத்தப்பட்டது என்பதை ஜேம்ஸ் மாட்டிஸ் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று இம்ரான் கான் கூறினார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட பின் அல்கொய்தாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கைகோர்த்தது மிக பெரிய தவறு. முஷரப் தலைமையிலான முந்தைய பாகிஸ்தான் அரசு அதை செய்திருக்கக்கூடாது. தங்களால் செய்ய முடியாததை செய்வதாக அமெரிக்காவிடம் வாக்குறுதி அளித்திருக்க கூடாது.

ஆப்கானிஸ்தானில் உருவான தலிபான்கள் ஆட்சியை அங்கீகரித்த 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவுக்கு எதிராக அமெரிக்க படைகள் தாக்குதலை தொடங்கும் போது அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது.

கடந்த 1980களில் சோவியத் யூனியன் ஆப்கனை ஆக்கிரமித்த போது அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் அவர்களுக்கு எதிராக போரிட்டது.

,சோவியத்துக்கு எதிரான புனித போருக்காக உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜிஹாத்துக்காக வந்தவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பயிற்சி அளித்தது.

சோவியத்துக்கு எதிராக போராட பாகிஸ்தான் ஜிஹாதிகளை உருவாக்கியது. கடந்த 1989ம் ஆண்டு ஜிஹாதிகள் மிகவும் போற்றப்பட்டனர்.  அவர்களின் தாக்குதலால் சோவியத் படைகள் ஆப்கனை விட்டு வெளியேறின. அதன் பின் அமெரிக்காவும் வெளியேறியது.

ஆனால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய படைகள் பாகிஸ்தானில் கைவிடப்பட்டன. அதன்பின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் அவர்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்த துவங்கின. ஒருகாலத்தில் வெற்றி வீரர்களாக போற்றப்பட்ட ஜிஹாதிகள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

வெளிநாட்டு முற்றுகைக்கு எதிராக போராடுவது ஜிஹாத் என்றால் ஆப்கன் மண்ணில் அமெரிக்கா நுழைந்து தாக்குதல் நடத்தினால் அது மட்டும் பயங்கரவாதமா ? இந்த பிரச்சனையில் பாகிஸ்தான் தான் பலி ஆடாக மாறியுள்ளது. இந்த பிரச்சனையில் அமெரிக்காவுடன் கைக்கோர்க்காமல் பாகிஸ்தான் நடுநிலை வகித்திருக்க வேண்டும்.

ஆப்கனில் ராணுவ நடவடிக்கையால் பிரச்சனை தீராது. கடந்த 19 ஆண்டுகளில் வெற்றி பெற முடியாத நிலையில் அமெரிக்கா அடுத்த 19 ஆண்டுகளுக்கு பின்பும் வெற்றி பெற போவதில்லை. எனவே தலிபான்களுடன் அதிபர் டிரம்ப் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை துவங்க வேண்டுமென்று இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தபோது நிதியுதவி செய்த சீனாவுக்கு பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துகொண்டார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...