குரு பார்க்க கோடி நன்மை

 குரு பார்க்க கோடி நன்மை

குரு பார்க்க கோடி நன்மை

மேஷம்


ஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் 13.03.2019 முதல் குரு­ப­க­வான் விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்­சி­யாகி ஒன்­ப­தா­மிட ஸ்தான பலன்­களை வழங்­கு­வார். மனைவி, மக்­கள் சுற்­றம் என்று உற­வு­கள் மேன்­மை­ய­டை­யும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை நில­வும். உங்­கள் முயற்­சி­கள் அனைத்­தும் வெற்றி பெறும். காரிய அனு­கூ­லம் தரும். சில­ருக்கு வெளி­நாடு செல்­லும் யோகம் வரும். பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும்.

இந்த சூழ்­யிலை 10.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு வக்­ர­மாகி மீண்­டும் விருச்­சிக ராசி கேட்டை நட்­சத்­தி­ரம் காலில் சஞ்­ச­ரிப்­பார். இத­னால் உங்­க­ளுக்கு கொடுக்­கல் வாங்­க­லில் சிர­மம் வரும். முன் ஜாமீன் யாருக்­கும் கொடுக்க வேண்­டாம். முன்­னெச்­ச ­ரிக்­கை­யு­டன் இருங்­கள். தேக ஆரோக்­யக்­குறை, காரி­யத்­தடை, போக்­கு­வ­ரத்­தில் முுன்­னெச்­ச ­ரிக்கை தேவை என சிர­மங்­கள் இருக்­கும். தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு வியா­ழக்­கி­ழமை தோறும் செய்­வது சிரம பரி­கா­ர­மாக இருக்­கும்.

இந்த நிலை 28.10.2019 வரை நீடிக்­கும் அதன் பிறகு வக்ர நிவர்த்­தி­யாகி மீண்­டும தனுசு ராசிக்கு வரும் பொழுது உங்­க­ளுக்கு குரு­வின் நற்­ப­லன்­கள் கிட்­டும். குடும்­ப­மேன்மை, பொரு­ளா­தார முன்­னேற்­றம் கடன் தீரு­தல் என பலன்­கள் இருக்­கும். குரு­வின் 5,7,9ம் பார்வை ராசிக்­கும், 3 ஆமி­டத்­திற்­கும் 5 ஆமி­டத்­திற்­கும் கிடைக்­கும். எனவே சுக சவுக்­கி­யம் பெரு­கும். சில­ருக்கு இட­மாற்­றம் இருக்­கும். இளைய சகோ­த­ரர் மேன்மை எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் – பூர்­வீக சொத்து கிட்­டும். புத்­தி­ர­பாக்­யம் இல்­லா­த­வர்­க­ளுக்கு புத்­திர பாக்­யம் கிட்­டும்.

இந்த சூழ்­நி­லை­கள் குரு­வின் பொதுப்­ப­லன்­க­ளாக இருக்­கும். மூல நட்­சத்­திர பாத சஞ்­சா­ரம் பொரு­ளா­தார மேன்மை, செல்­வம், செல்­வாக்கு, புத்­தி­சா­லித்­த­னம் என பலன்­கள் 16.11.2019 வரை நீடிக்­கும். 17.11.2019 முதல் குரு­வின் பூராட நட்­சத்­தி­ரம் கால் சஞ்­சா­ரம் பண­வ­ர­வு­கள் கூடும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­றம் – சுப­கா­ரிய அனு­கூ­லம் – தேக ஆரோக்­யம் என நற்­ப­லன்­கள் வழங்­கு­வார்.

இந்த சூழ்­நிலை 18.02.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரத்­தில் அரசு சார்ந்த விஷ­யங்­க­ளில் அனு­கூ­லம், தொழில் ரீதி­யான கவு­ர­வம் பாராட்டு, பயண அலைச்­சல் – உஷ்­ணம் சார்ந்த உடல் உபாதை என சூழ்­நி­லை­கள் இருக்­கும். இது 26.03.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு அதி­சா­ரம் பெற்று மகர ராசிக்கு செல்­கி­றார். இத­னால் தொழில் சார்ந்த சூழ்­நி­லை­யில் கடின உழைப்பு இருக்­கும். மனச்­சோர்வு, உடல்­சோர்வு உண்­டா­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் வரும். இந்த சூழ்­நிலை 8.7.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு மீண்­டும் தனசு ராசிக்கு வந்து உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது நற்­ப­லன்­கைள வழங்­கு­வார்.

09.07.2020 முதல் குரு உத்­தி­ராட சஞ்­சா­ரம் தனுசு ராசி­யில் 14.12.2020 வரை இருந்து நற்­ப­லன்­கள் வழங்­கு­கி­றார். சனி, கேது­வின் சிரம் பலன்­கள் குரு­வின் சேர்க்­கை­ய­யால் குறை­யும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்­ச­சி­யா­கி­றார். நீங்­கள் விநா­ய­கர் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு, செய்­வது சிர­மப் பரி­கா­ர­மா­கும். தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு நன்­மை­கள் தரும். குருப்­பெ­யர்ச்சி உங்­க­ளுக்கு சாத­கம். உங்களுக்கு வகர பலன்களும் அதிசார பலன்களும் சாதக மில்லை. ஆனாலும் குருவின் 9ம் இடம் ஸ்தானங்களுக்கு நற்பலன்கள் தருவார். உங்களுக்கு வியாழக் கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு பலன்களை தரும்.

ரிஷபம்


கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதம் 13.03.2019 முதல் குரு­ பக­வான் விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்­சி­யாகி எட்­டா­மிட ஸ்தான பலன்­களை வழங்­கு­வார். ஏற்­க­னவே சனி, கேது எட்­டா­மிட சிரம பலன்­கள் இருக்­கும். ஆனா­லும், குரு­வின் சேர்க்கை அந்த சிர­மங்­களை குறைக்­கும். பணச்­சி­ர­மம், சேமிப்பு கரை­தல் – தேக ஆரோக்­யக்­குறை, காரி­யத்­தடை போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்ச­ ரிக்கை தேவைப்­ப­டும். மனக்­கு­ழப்­பம் என பொதுப்­ப­லன்­க­ளாக இந்த குருப்­பெ­யர்ச்­சி­யில் இருக்­கும். அதே­போல் குரு­வின் 5,7,9ம் பார்வை 12ம் இடத்­திற்­கும், 2ம் இடத்­திற்­கும், 4ம் இடத்­திற்­கும் இருப்­ப­தால் – சுபச்­செ­ல­வு­கள், தன­வி­ர­யம் ஏற்­ப­டும். சுக­போ­ஜ­னம் – சுக­ஜீ­வ­னம், பொரு­ளா­தார மேன்மை, பண­வ­ரவு, கல்­வி­யில் முன்­னேற்­றம், தன­வி­ருத்தி என பார்வை பலன்­கள் இருக்­கும். இது ஆண்டு முழு­வ­தும் நீடிக்­கும் குரு­வின் மூலம் நட்­சத்­திர சஞ்­சார பலன்­கள் 13.3.3019 முதல் எதிர்­பா­ராத செல­வு­கள் வரும். திட்­டங்­கள் சிறப்­பாக இருந்­தா­லும் அதன் செயல்­பா­டு­க­ளில் சிர­மங்­கள் கடின உழைப்பு என இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் புத்­தி­சா­லித்­த­னம் முன்­னெச்­ச­ ரிக்கை தேவைப்­ப­டும். கற்­பக விநா­ய­கர் வழி­வாடு இந்த சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக அமை­யும்.குரு­வின் மூல நட்­சத்­திர சஞ்­சா­ரம் 10.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு வக்­ர­மாகி மீண்­டும் விருச்­சிக ராசிக்கு வந்து கேட்டை நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­வார். கடின உழைப்பு, வீண் விவ­கா­ரம், பயண அலைச்­சல், எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் என்று சிர­மங்­கள் இருந்­தா­லும் எதிர்­பா­ராத பண­வ­ரவு மகிழ்ச்சி தரும். சுப­கா­ரிய அனு­கூ­லம் என இருக்­கும். இந்த வக்­ர­பெ­யர்ச்சி பலன்­கள் 28.10.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு வக்ர நிவர்த்­தி­யாகி மீண்­டும் தனசு ராசிக்கு வரும் பொழுது உங்­க­ளுக்கு குரு­வின் பலன்­கள் புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பாடு – கடின உழைப்பு, பயண அலைச்­சல், மனக்­க­வலை, உடல் சோர்வு, மனச்­சோர்வு என சிர­மங்­கள் இருந்­தா­லும் பக்தி பெருக்கு – இறை­ய­ருள் – பண­வ­ரவு, என சுப பலன்­க­ளும் இருக்­கும். இந்த சூழ்­நிலை 16.11.2019 வரை நீடிக்­கும். 17.11.2019 முதல் பூராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு பொரு­ளா­தார முன்­னேற்­றம், சுபா­ரிய முன்­னேற்­றம், என சுப பலன்­க­ளைக் கொடுத்­தா­லும், தேக ஆரோக்­யக்­குறை போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச ­ரிக்கை தேவைப்­ப­டும். எனவே பதட்­டப்­ப­டா­மல் பொறு­மை­யு­டன் சிந்­தித்து செயல்­ப­டு­வது உத்­த­மம். இந்த சூழ்­நிலை 18.02.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது உஷ்­ணம் சார்ந்த தேக உபாதை, முன் கோபம், டென்­ஷன் என சூழ்­நி­லை­கள் சிர­மப்­ப­டுத்­தும். பொரு­ளா­தரா சூழ்­நி­லை­கள் தாரா­ள­மாக இருக்­கும்.

இந்த சூழ்­நிலை 26.03.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு அதி­சா­ரம் பெற்று மகர ராசிக்கு செய்­கி­றார். இத­னால் உங்­க­ளுக்கு எண்­ணிய எண்­ணம் ஈடே­றும். குடும்­பத்­தில் சந்­தோ­ஷ­மான சூழ்­நிலை இருக்­கும். சுப­கா­ரிய அனு ­கூ­ல­மா­கும். இந்த சூழ்­நிலை 8.7.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு மீண்­டும் தனுசு ராசிக்கு வந்து உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது மீண்­டும் சிரம பலன்­களை கொடுப்­பார். 9.7.2020 முதல் குரு உத்­தி­ராட நட்­சத்­திர முதல் பாத சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது தனுசு ராசி­யில் 14.12.2020 வரை இருந்து சிர­மங்­களை கொடுத்­தா­லும் பொதுப் பல­னாக நற்­ப­லன்­க­ளை­யும் வழங்­கு­வார். சனி, கேது­வின் சிரம பலன்­கள் – குரு­வின் சேர்க்­கை­யால் குறை­யும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்கு பெயர்ச்­ச­யிா­கி­றார். நீங்­கள் விநா­ய­கர் வழி­பாடு துர்க்­கை ­யம்­மன் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு, தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு செய்­வது உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். குரு பெயர்ச்சி எட்­டா­மி­டம் என்­ப­தால உங்­க­ளுக்கு சிர­மம்.


மிதுனம்

மிருகசீரிஷம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதம் 13.03.2019 முதல் குரு­ப­க­வான் விருச்­சிக ராசி­யி­லி­ருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்­சி­யாகி ஏழா­மிட ஸ்தான பலன்­களை வழங்­கு­வார். ஏற்­க­னவே சனி, கேது சேர்க்கை குடும்ப ஸ்தானத்தில் சிர­மங்­களை கொடுத்­தா­லும் குரு­வின் ஏழாமிட சஞ்­சா­ரம் சேர்க்கை அந்த சிர­மங்­களை குறைக்­கும். சுப­கா­ரி­ய­வி­ருத்தி,குடும்­ப­மேன்மை, தன ­தான்ய விருத்தி, குடும்ப மகிழ்ச்சி, திரு­ம­ண­மா­க ­த­வர்­க­ளுக்கு – வியாழ நோக்கு – திரு­மண வாய்ப்பு வரும். அதே போல் குரு­வின் 5,7,9ம் பார்­வை­கள் 11ம் இடம், ராசி, 3ம் இடம் பார்வை பதி­வ­தால் தன­லா­பம், பதவி உயர்வு, சுக­போ­கம், சுக சவுக்­யம் பெரு­கு­தல், இட­மாற்­றம் இளைய சகோ­த­ரர் மேன்மை, எதிர்­பா­ராத செல­வி­னங்­கள், தன விர­யம் என பார்வை பலன்­கள் இருக்­கும். மேற்­படி பொதுப்­ப­லன்­கள் ஆண்டு முழு­வ­தும் இருக்­கும்.

குரு­வின் மூலம் நட்­சத்­திர சஞ்­சார பலன்­கள் 13.03.3019 முதல் எதிர்­பா­ராத பண­வ­ரவு சுப­கா­ரிய ஈடு­பாடு, ஆன்­மிக ஈடு­பாடு, சுக­ச­வுக்­யம், உற­வு­கள் மேன்மை, தேக ஆரோக்­யம் என சுப­ப­லன்­கள் குரு­வின் மூல நட்­சத்­திர சஞ்­சார பலன்­க­ளாக 10.04.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு வக்­ர­மாகி மீண்­டும் விருச்­சிக ராசிக்கு வந்து கேட்டை நட்­சத்­தி­ரத்­தில் சஞ்­சா­ரம் செய்­வார். இத­னால் பணச்­சி­ர­மம் – கடன் வாங்­கு­தல் வாழ்க்கை துணை நலம் – வழி சங்­க­டம், குடும்­பத்­தில் வீண் வாக்­கு­வா­தம் என சிர­மங்­கள் இருக்­கும். இந்த வக்ர பெயர்ச்சி பலன்­கள் 28.10.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு வக்ர நிவர்த்­தி­யாகி மீண்­டும் தனுசு ராசிக்கு குரு வரும்­பொ­ழுது உங்­க­ளுக்கு குரு­வின் மூல நட்­சத்­திர சஞ்­சார பலன்­கள் மீண்­டும் தொட­ரும். சுப­கா­ரிய ஈடு­பாடு, ஆன்­மிக ஈடு­பாடு, சுக­ச­வுக்­கி­யம், உற­வு­கள் மேன்மை, பண­வ­ரவு, கடன் தீரு­தல், என சுப பலன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை 16.11.2019 வரை நீடிக்­கும். 17.11.2019 முதல் பூராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் உங்­க­ளு க்கு பொரு­ளாதா முன்­னேற்­றம் சுபச்­செ­ல­வி­னங்­கள், சுக­போ­கம் பண­வ­ர­வு­கள், தன­தான்ய விருத்தி என நற்­ப­லன்ள் கொடுப்­பார். எனவே சூழ்­நி­லையை அனு­ச­ரித்து சிந்­தித்து செயல்­ப­டு­வது உத்­த­மம்.

இந்த சூழ்­நிலை 18.2.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது, உங்­க­ளுக்கு தொழில் ரீதி­யான முன்­னேற்­றம், கவு­ர­வம், அரசு சார்ந்த விஷ­யம் அனு­கூ­லம், குடும்­பத் தேவை­கள் பூர்த்­தி­யா­கு­தல் – உஷ்­ணம் சார்ந்த தேக ஆரோக்­யக்­குறை என பலன்­கள் இருந்­தா­லும் பொரு­ளா­தார சூழ்­நி­லை­ கள் தாரா­ள­மாக இருக்­கும். இந்த சூழ்­நிலை 26.3.2020 வரை நீடிக்­கும். அதன் பிறகு குரு அதி­சா­ரம் பெற்று மகர ராசிக்கு செல்­கி­றார். இத­னால் உங்­க­ளுக்கு எதிர்­பா­ராத சிர­மங்­கள் வரும். பண நெருக்­கடி வரும், வீண் விஷ­யங்­கள், காரி­யத்­தடை, ஜாமீன் கொடுத்த வகை­யில் சிக்­கல், போக்­கு­வ­ரத்­தில் சிர­மம் என சிரம பலன்­கள் இருக்­கும். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து இந்த கால­கட்­டத்­தில் திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். இந்த சூழ்­நிலை 8.7.2020 வரை நீடிக்­கும்.

அதன் பிறகு குரு மீண்­டும் தனுசு ராசிக்கு வந்து உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது மீண்­டும் நற்­ப­லன்­களை வழங்­கு­வார். 9.7.2020 முதல் குரு உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சார பலன்­கள் தொழில் ரீதி­யான மேன்மை, கவு­ர­வம், அரசு வழி நன்மை, குடும்­பத் தேவை­கள் பூர்த்­தியா­ குதல், உஷ்­ணம் சார்ந்த உடல் உபாதை, முன்­கோ­பம் மன­சோர்வு என பலன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை 14.12.2020 வரை நீடிக்­கும். குரு­வின் சேர்க்கை சனி கேது­வின் சிர­மப்­ப­ லன்­கள் குறை­யும், பொதுப்­ப­லன்­கள் நற்­ப­லன்­க­ளாக இருக்­கும். பார்­வைப் பலன்­கள் உத்­த­ம­மாக இருக்­கும். 15.12.2020 முதல் குரு மகர ராசிக்­கும் பெயர்ச்­சி­யா­கி­றார். நீங்­கள் விநா­ய­கர் வழி­பாடு, துர்க்­கை­யம்­மன் வழி­பாடு, பெரு­மாள் வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு நன்மை தரும். குருப்­பெ­யர்ச்சி உங்­க­ளுக்கு உத்­த­மம்.

நாளை தொடரும் ……….

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...