உடல் பாகங்களை மக்கள் விற்று வருவதாக அதிர்ச்சி

 உடல் பாகங்களை மக்கள் விற்று வருவதாக அதிர்ச்சி

 ஈரானில் வறுமை காரணமாக உடல் பாகங்களை மக்கள் விற்று  ருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகியதிலிருந்தே பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. ஏகப்பட்ட பொருளாதார தடைகளால் ஏற்கனவே சீர்குலைந்த ஈரான் மேலும் பொருளாதாரரீதியான சவால்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவானது.

ஈரானின் கச்சா எண்ணெய் வியாபாரத்தையும் அமெரிக்க அரசு முடக்கியது. அமெரிக்க நட்பு நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வியாபாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் உள்நாட்டு சந்தையை நம்பியிருந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் சரிந்து வரும் பொருளாதாரத்தால் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன.

இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கே தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலையும் அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் ஈரான் இளைஞர்கள் பலர் தங்கள் குடும்ப சுமைகளை நிவர்த்தி செய்ய வேண்டி தங்களது உடல் உறுப்புகளை விற்பதாக எழுதி ஊரெங்கும் சுவர்களில் ஒட்டியுள்ளனர்.

தங்கள் ரத்த வகை, முகவரி உள்ளிட்டவற்றோடு ஈரானில் பல இடங்களில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவை பொறுத்து கிட்னி 10 ஆயிரம் டாலர்கள் முதலும், கல்லீரல் 50 ஆயிரம் டாலர்கள் வரையிலும் விற்பனையாகின்றன என கூறப்படுகிறது.

இதற்காகவே கிட்னி தெரு என்று ஒரு பகுதியே இருப்பதாக என்.சி.ஆர்.ஐ என்ற அமைப்பு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வறுமைக்காக உடல் பாகங்களையே விற்கும் ஈரானின் அவல நிலை உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...