வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு ! | தனுஜா ஜெயராமன்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இந்தியாவில் விற்கப்படும் 19 கிலோ வர்த்தக LPG சிலிண்டர்களின் விலையை சுமார் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த உலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை உயரவில்லை.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள வர்த்தக சிலிண்டருக்கின 100 ரூபாய் உயர்வு மூலம் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை 1,833 ரூபாய். இதேபோல் கொல்கத்தாவில் ரூ.1,943 ஆகவும், மும்பையில் ரூ.1,785 ஆகவும், பெங்களூரில் ரூ.1,914.50 ஆகவும், சென்னையில் ரூ.1,999.50 ஆகவும் உள்ளது.
செப்டம்பர் மாதம் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலையை 157 ரூபாய் அளவுக்கு குறைத்தது. 14.2-கிலோ வீட்டு பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் விலை மாறாமல் இருக்கும் வேளையில் நவம்பர் மாதம் டெல்லியில் ரூ.903, கொல்கத்தாவில் ரூ.929, மும்பையில் ரூ.902.50, பெங்களூரில் ரூ.905, சென்னையில் ரூ.918.50 ஆகிய விலைகளில் வர்த்ததம் செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வால் ஹோட்டல் , சிறிய உணவகங்கள் உரிமையாளர்களை நேரடியாக பாதிக்கும் என சொல்கிறார்கள். இதன் காரணமாக ஏழை நடுத்தர வியாபாரிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாக நேரிடும். இதன் காரணமாக உணவு பொருட்களின் விலையும் ஏறும் என சொல்கிறார்கள்.
மத்திய அரசின் கீழ் இருக்கும் எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர் விலையை திருத்தம் செய்து வருகிறது.