ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்

 ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவாகியுள்ளது

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 2053 பேர் இறந்துள்ளனர் என தகவல்கள் வருகின்றது. ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தலிபான்கள் ஆளுகைக்கு உட்பட்ட ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான ஹெராட் நகரின் வடமேற்கில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் அப்போதே 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழப்பு 2 ஆயிரத்தை எட்டி உள்ளது. இந்த நிலநடுக்க காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆப்கானிஸ்தான் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநில மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தற்போது வரை 2053 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 9240 பேர் காயமுற்றுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...