லூலூ குரூப் தனது அடுத்த மால் ஹைதராபாத்தில் திறக்க உள்ளதாம் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
ஹைதராபாத்தில் வேகமாக வளரும் பகுதியான குகட்பல்லியில் இந்த லூலூ மெகா ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இந்த மால் மூலம் குறைந்தது 2000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை தொடர்ந்து சுமார் ரூ.2500 கோடி முதலீட்டில் ஹைதராபாத்தில் மற்றொரு இடத்திலும் மால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
கேரளாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு குடிபெயர்ந்த எம்.ஏ.யூசப் அலி மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்போது இந்தியாவில் கேரளா-வை தாண்டி பிற மாநிலங்களிலும் விரிவாக்கம் செய்து வருகிறது லூலூ குரூப்.
சமீபத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டின் 2வது பெரிய தொழில்நகரமாக உருவாகி வரும் கோயம்புத்தூரில் லூலூ மால் திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மக்கள் லூலூ மால் திறப்பதற்கு முன்பும் சரி, பின்பும் சரி அதிகப்படியான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தினமும் சராசரியாக 10000 வாடிக்கையாளர்களை ஈரத்து வருகிறது.
இந்த மாபெரும் வெற்றியால் உடன் லூலூ குரூப் தனது அடுத்த மால்-ஐ ஹைதராபாத்தில் திறக்க உள்ளது. பெங்களூர், கோவை-யின் வெற்றியை தொடர்ந்து ஹைதராபாத் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விஷயமாக லூலூ மால் உள்ளது. ஹைதராபாத்தில் இதன் பிரமாண்ட திறப்பு விழா செப்டம்பர் 27 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மால் 500000 சதுர அடியில் பரப்பளவில் சுமார் 200000 சதுர அடியில் லுலு ஹைப்பர் மார்க்கெட் மட்டும் அமைந்துள்ளது. கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத் 6வது நகரமாக லூலூ மால் இந்தியாவில் துவங்கப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் புதிய லுலு மால் விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.