இன்போசிஸ் – NVIDIA கூட்டணி! | தனுஜா ஜெயராமன்
இன்போசிஸ் – NVIDIA கூட்டணியில், NVIDIA நிறுவனம் தனது ஏஐ மாடல்கள், டூல்ஸ், அப்ளிகேஷன், கம்பியூட் இன்பரா ஆகிய அனைத்தையும் இன்போசிஸ் உடன் பகிர உள்ளது
இன்போசிஸ் நிறுவனத்தின் 3.36 லட்சம் ஊழியர்களில் 50000 ஊழியர்களுக்கு இந்த அதிநவீன தொழில்நுட்பத்தில் அனுபவம் பெறுவதன் மூலம் ஏஐ சார்ந்த திட்டத்தில் இன்போசிஸ் ஊழியர்கள் எளிதாக பயன்படுத்த முடியும் என்கிறார்கள்.
டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு துறைக்கான சிப்களை தயாரிக்கும் NVIDIA நிறுவனத்திடம் முக்கியமான ஒப்பந்தம் செய்து, அதிகப்படியான ஏஜ சிப் வாங்குவது குறித்து ஆலோசனை செய்து வந்தது. இந்த நிலையில் இன்போசிஸ் புதிய கூட்டணியை NVIDIA நிறுவனத்துடன் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 50000 ஊழியர்கள் Nvidia-வின் ஏஐ ஸ்டாக் பிரிவில் பயிற்சி பெற உள்ளனர். இதன் மூலம் NVIDIA நிறுவனத்தின் கருவிகளை பயன்படுத்தும் அனைத்து சேவைகளிலும் இன்போசிஸ் ஊழியர்கள் பணியாற்றும் திறன் பெற உள்ளனர்.
இதன் வாயிலாக இன்போசிஸ் ஏஐ துறையில் எவ்விதமான தடையுமின்றி அதிகப்படியான வர்த்தகத்தை பெற முடியும். இந்த கூட்டணி இன்போசிஸ் ஊழியர்கள் மட்டும் அல்லாமல் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கும் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இதுகுறித்து இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் சேர்மன் நந்தன் நீலகனி கூறுகையில், இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் NVIDIA கூட்டணி மூலம் இந்தியாவின் முதல் ஏஐ நிறுவனமாக மாற உள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் உலகளாவிய நிறுவனத்திற்கு அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க முடியும்.
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய சேவைகளை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் சேவைகளை மேம்படுத்துவது என மொத்தமாத AI-ஐ நம்பி இயங்கும் மனநிலைக்கு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு சேவைகள் பல வகையில் செலவுகளை குறைப்பது மட்டும் அல்லாமல் பணியில் செயல்திறன் பெரிய அளவில் மேம்பட்டு வருகிறது.