இன்றைய ராசி பலன் (சனிக்கிழமை 16 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 16.9.2023. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 09.32 வரை பிரதமை . பின்னர் துவிதியை. இன்று காலை 08.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம், சதயம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் :  குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள். துணிவுடன் விரும்பிய பெண்ணிடம் மனதை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களைக் கூறாதீர்கள். தாயாரின் முட்டி வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை அதிகரிப்பீர்கள்.

ரிஷபம் : எதிர்பார்ப்புடன் இருந்த காரியத்தில் கொஞ்சம் ஏமாற்றம் அடைவீர்கள். கலைத்துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வேலை வாய்ப்பு பெறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கை யால் மனச் சங்கடத்தை அடைவீர்கள். சிறு வியாபாரிகள் சிறப்பான லாபம் பெறுவீர்கள். கடுமையாகப் பேசி காதலில் விரிசலை உண்டாக்குவீர்கள்.

மிதுனம் :  நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வை பெறுவீர்கள். தொந்தரவு கொடுத்து வந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். அலைச்சல் அதிகம் ஆனாலும் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். நிலம் வாங்கி விற்கும் வியாபாரத்தை சிறப்பாக செய்வீர்கள். கனிவுடன் பேசி காதலில் வெற்றி பெறுவீர்கள்..

கடகம் : வலியச் சென்று வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். விருப்பமில்லாத இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகள் அனுப்புவதில் தாமதம் செய்வீர்கள். மனைவியின் கோபத்தை குறைப்பீர்கள். அழுத்தமாக பேசி அரசியல் வட்டாரத்தில் முக்கிய இடத்தை பிடிப்பீர்கள் .

சிம்மம் : தாமதமாக கிடந்த காரியங்களை ஜெட் வேகத்தில் நடத்துவீர்கள். புதிய வீடு கட்டுவீர்கள். பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். காண்ட்ராக்ட் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். வங்கி லோன் பெறுவீர்கள். சிறு வியாபாரிகள் பொருளாதார ஏற்றம் பெறுவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் கடின வேலையால் அதிக லாபம் பார்ப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

கன்னி : அடுத்தவர் பிரச்சனைக்கு தீர்வு சொல்வீர்கள். ஆனால், உங்கள் விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். சாமர்த்தியமாக நடந்து குடும்ப விவகாரங்களைச் சரி செய்வீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள் உறவுகளில் வீணாக சச்சரவுகளை உண்டாக்குவீர்கள்.

துலாம் : பணியாளர் பற்றாக்குறையால் கூடுதல் பொறுப்புகளை சுமப்பீர்கள். வியாபாரம் மந்த நிலையில் நடப்பதால் மனச் சோர்வு அடைவீர்கள். தொழிற்சாலையில் மின்சாரத் தடையால் உற்பத்தி பாதிப்பை சந்திப்பீர்கள். காதலியின் கோபத்தை மாற்றி இதமாக நடந்து கொள்வீர்கள்.. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சியை பிரச்சனையின்றி முடிப்பீர்கள்.

விருச்சிகம் : சகோதர வகையில் எதிர்ப்பை சந்திக்க இயலாமல் தடுமாறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்க கடன்படுவீர்கள். கணினித்துறையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். நிலம் வாங்கி விற்பதில் லாபத்தை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி வயிற்றுக் கோளாறால் அவதிப்படுவீர்கள். கட்டுமான தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தனுசு  :   சிறு வியாபாரிகள் கூடுதலான லாபம் அடைவீர்கள். அரசுப்பணியாளர்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். கலைத்துறையினர் பெரும் புகழடைவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றிகண்டு வியாபாரத்தில் வேகம் காட்டுவீர்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள்.

மகரம் : திருமணம் தொடர்பான காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். தவறாகப் புரிந்து கொண்டு நண்பர்களைக் காயப்படுத்தி விடாதீர்கள். உதவி செய்வதன் மூலம் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பார்ட்னர்ஷிப் பத்திரங்களில் கவனமாக கையெழுத்து போட மறக்காதீர்கள். பிள்ளைகளால் மிகுந்த பெருமை அடைவீர்கள்.

கும்பம் : வியாபாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். அரசு வேலையில் தவறான குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தனியார் துறையில் வீண் அலைச்சலாலும் டென்ஷனாலும் உங்கள் மன நிம்மதியை இழப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை தள்ளி வையுங்கள். சந்திராஷ்டம நாள். நிதானம் தேவை.

மீனம் : குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு புதிய தோழிகள் கை கொடுப்பார்கள். மாணவர்கள் பாதியில் நிறுத்திய கல்வியைத் தொடர்வீர்கள். அலைச்சல் அதிகமானாலும் புதிய ஆர்டர்கள் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். ஆன்-லைன் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபாடு காட்டாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!