“கூகிள் தொடங்கப்பட்ட நாள் இன்று”
கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும்.
தொடக்கம்: மென்லோ பார்க்,கலிபோர்னியா
தொடங்கிய ஆண்டு: செப்டம்பர் 7 1998
தலைமையகம்: மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா
டைரக்டர்: எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO )
தொழில்நுட்ப தலைவர்: சேர்ஜி பிரின் ( Sergey Brin ) மற்றும் லாரி பேஜ் ( Larry Page )
தொழில்துறை: இணையம் (Internet), மென்பொருள் (Software Products)
ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும் Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து Search Results பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இந்த முறையே சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்(“BackRub”) என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர்.
இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பதற்கு அந்த காலகட்டத்தில் சிறிய சர்ச் என்ஜின் ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம் (google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் Car Shed- ல் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது Silicon Valley பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு ( Typo Error ) செய்தபோது பிறந்ததே “கூகிள்” என்ற புதிய சொல். கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது.
ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது Goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். Goto.com என்ற இதன் பெயர் (Overture Services) ஆகவும் பின்நாளில் YAHOO! இனால் கொள்முதல் செய்யப்பட்டு Yahoo! Search Marketing ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல நிறுவனங்களும் தோற்று விட “கூகிள்” லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது. ஆரம்பத்தில் “கூகோல்” (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான “கூகிள்” என்பது மிக பிரபலம் ஆயிற்று.