100 கோடி வசூலை நெருங்கும் குஷி..!
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படம் கடந்த வாரம் 1ம் தேதி வெளியானது. சிவ நிர்வாணா இயக்கியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ள குஷி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில், முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2கே கிட்ஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் குஷி. விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. சிவ நிர்வாணா இயக்கிய இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. காதல் பின்னணியில் ரொமாண்டிக் ஜானர் படமாக உருவாகியுள்ள குஷி, ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவருக்குமே கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதனால், குஷி திரைப்படம் அவர்களது கேரியரில் ரொம்பவே முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் குஷி படத்திற்கு முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்தது. விஜய் தேவரகொண்ட, சமந்தா கெமிஸ்ட்ரியில் உருவான ரொமாண்டிக் காட்சிகளுடன், கதையும் திரைக்கதையும் படத்தின் வெற்றிக்கு காரணமாகியுள்ளது. விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்ள, அதன்பின்னர் அவர்களுக்குள் நடக்கும் ஈகோ யுத்தம் தான் குஷி. விஜய் – ஜோதிகா நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான குஷி படத்தின் டைட்டில் போல, கதையிலும் அதே ஈகோவை பின்னணியாக வைத்து, கொஞ்சம் கலர்ஃபுல்லாக ட்ரீட் கொடுத்துள்ளார் சிவ நிர்வாணா. ஒட்டுமொத்தமாக 2கே கிட்ஸ்கள் கொண்டாடும் படமாக குஷி உருவாகியுள்ளது.
இந்நிலையில் குஷி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகின. அதன்படி குஷி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடி வசூலித்துள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்தது. அதேபோல், முதல் இரண்டு நாட்களில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர்கள் கலெக்ஷன் ஆகியுள்ளது. தொடர்ந்து குஷி படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்ததால், இரண்டாவது நாளிலேயே 51 கோடி ரூபாயை கடந்தது. அதன் தொடர்ச்சியாக முதல் வார இறுதியான நேற்றும் (செப் 3) குஷி படத்தின் கலெக்ஷன் தாறுமாறு என சொல்லப்படுகிறது. அதன்படி, மூன்றாவது நாளில் 20 முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குஷி. ஆகமொத்தம் மூன்று நாட்களில் 75 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், இன்னும் ஓரிரு தினங்களில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் குஷி திரைப்படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.