இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை 31 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை 31 ஆகஸ்டு 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 31.8.2023,சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 08.17 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை, இன்று இரவு 08.17 வரை சதயம். பிறகு பூரட்டாதி. பூசம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் : இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும். பணியில் முன்னேற்றம் காணப்படும். பணியில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணம் அதிகமாக காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள். நீங்கள் இன்று மகிழ்ச்சியான மன நிலையில் காணப்படுவீர்கள்.

ரிஷபம் : இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். இதன் மூலம் உங்கள் கனவுகள் நிறைவேறும். இலக்குகளை அமைத்துக் கொண்டு செயலாற்றுவது சிறந்தது. உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடம் உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமானதாக இருக்கும். இன்று நிதிநிலைமை சாதகமாக இருக்கும். உங்களிடம் காணப்படும் மன தைரியம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் :  இன்று சாதகமான பலன்கள் காண உகந்த நாள் அல்ல. உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போரட வேண்டும். அதிர்ஷ்ட வாய்ப்பும் குறைவாக உள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அதிக பணிகள் உங்களுக்கு கவலை அளிக்கும். ஒய்விற்கான நேரம் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். நிதி நிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. அதிக செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். இன்று சிறிது அசௌகரியமாக உணர்வீர்கள்.

கடகம் : இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்காது. இன்றைய நாள் சீராகச் செல்ல அனுசரணையான போக்கு தேவை. சில சமயங்களில் உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு தோன்றும்.தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் சகபணியாளர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நிதிநிலையை சமாளிப்பது கடினமாக இருக்கும்.

சிம்மம் : இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்களின் தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உறுதியான போக்கு மூலம் நீங்கள் தடைகளை வெல்வீர்கள். நீங்கள் உங்கள் அனைத்துப் பணிகளையும் சிரத்தையுடன் ஆற்றுவீர்கள். இதனால் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு பண வரவு காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி : இன்று சாதகமான சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். நிதிநிலைமை சிறந்த பலனளிக்கும். கணிசமான தொகை சேமிப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு நீங்கள் ஊக்கத் தொகை பெறுவீர்கள். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீக நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். பணியிடச் சூழலில் பதட்டம் காணப்படும். இருக்கும் சூழ்நிலைகேற்ப அனுசரித்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சாவலான சூழ்நிலை காரணமாக பதட்டம் காணப்படும். இசை கேட்பது மற்றும் திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் பதட்டத்தை விலக்கி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். முறையாக திட்டமிடுவதன் மூலம் பணிகளை சிறப்பாக கையாள இயலும். பண வரவு குறைந்து காணப்படும்.

தனுசு  :   இன்று எதிர்பாராத நன்மைகள் விளையும். இன்று நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். உங்கள் திறமை உங்கள் நண்பர்கள் உட்பட மற்றவரை ஆச்சரியப்படுத்தும். நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். வேலையைப் பொறுத்த பொறுப்பு உங்களிடம் காணப்படும். பண வரவு உங்களை மகிழ்ச்சியுறச் செய்யும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் :  இன்று சம்பவங்கள் சீராக நடைபெற அனுசரணையான அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் விவேகம் வேண்டும். முக்கியமான விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

கும்பம் : இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும் , அமைதியின்மையும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் மன அமைதி பெற உங்களுக்கு உதவும். பணியிடத்தில் உங்கள் செயல் திறன் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மன உளைச்சல் காரணமாக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது.உங்கள் வளர்ச்சியை தாமதப் படுத்தும் வகையில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். உங்கள இலக்குகளை அடைய முறையாக திட்டமிட வேண்டும். பணிச்சுமை கவலை அளிக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும். நிதிநிலை திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்படிக்கு நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...