ரயிலிலேயே ஒரு படத்துக்கு எல்லா பாட்டையும் போட்ட இளையராஜா!..

 ரயிலிலேயே ஒரு படத்துக்கு எல்லா பாட்டையும் போட்ட இளையராஜா!..

தமிழ் சினிமாவில் தனது ரம்மியமான இசை மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. பண்ணையபுரத்தில் இருந்து சென்னை வந்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக நடிக்க துவங்கி கிராமத்திய இசை மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர்.

80களில் பல திரைப்படங்கள் இளையராஜாவின் இசையை மட்டும் நம்பியே உருவானது. இளையராஜாவும் தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் பல சுமாரான பாடல்களையும் சூப்பர் ஹிட் படமாக மாற்றினார். அதனால் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையையே தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நம்பியிருந்தனர்.

வசனங்கள் கூட இல்லாத உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை ராஜா தனது பின்னணி இசையால் பேச வைத்தார். இந்த படம் தேறாது என தயாரிப்பாளரே நினைத்த படத்தை கூட தனது பின்னணி இசையால் வெற்றிப்படமாக்கியவர் இளையராஜா. திறமையான இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மிகவும் வேகமாக வேலை செய்யும் நபராகவும் ராஜா இருந்தார்.

காலை 7 மணிக்கெல்லாம் பிரசாத் ஸ்டுடியோ வந்தால் இரவு வரை பாடல்களை உருவாக்கும் பணியில் இருப்பார். சில சமயம் 4 மணி நேரங்களில் ஒரு படத்திற்கான அனைத்து பாடல்களையும் போட்டு கொடுத்துவிடுவார். சின்னத்தம்பி படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் அவர் ஒரு நாளில் போட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.

பல படங்களுக்கு இசையமைத்த பின் அவருக்கு அந்த அனுபவம் வந்ந்திருக்கலாம் என நினைத்தால் அதுதான் இல்லை. அவர் சினிமாவில் அறிமுகமானது முதலே அப்படித்தானாம். அன்னக்கிளி படம் வெளியாகி 2 வருடம் கழித்து வந்த திரைப்படம் கிழக்கே போகும் ரயில். பாரதிராஜா இயக்கத்தில் ராதிகா அறிமுகமான படம் இது. இந்த படத்தில் சுதாகர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படம் வெற்றியடைந்து 100வது நாள் விழா எடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு மதுரைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார் இளையராஜா. அப்போது பொண்ணு ஊருக்கு புதுசு என்கிற படத்திற்கு அவர் இசையமைக்க வேண்டியிருந்தது. எனவே, ரயிலேயே 5 பாடல்களுக்கு மெட்டமைத்து அவரின் சகோதரர் கங்கை அமரன் பாடல்களை எழுதிவிட்டாராம்.

இந்த படத்திற்கும் சுதாகர்தான் ஹீரோ. இந்த படத்தில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு அவர் பாடும் ‘ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ சூப்பர் ஹிட் அடித்தது. அந்த பாடலுக்கான மெட்டை ரயிலில்தான் ராஜா உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...