அன்னை தெரசா

அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று :

ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியா நாட்டில்
1910 ஆகஸ்ட் திங்கள் 26ஆம் நாள் அவதரித்தாய்

அறிவில் சிறந்தோங்கி ஆக்கபூர்வ பணி தொடர்ந்திட எண்ணம் வளர்த்தாய்

ஆசிரியராய், கல்வி கற்றுக் கொடுக்க கல்கத்தா நகரம் வந்தாய்

அங்குள்ள மக்கள் நிலை கண்டு நல்ல சிந்தனையை மனதில் வளர்த்தாய்

கருணை இல்லம் ஒன்றை அமைக்க அந் நகரினையே தேர்ந்தெடுத்தாய்

கஷ்டங்களில் சூழ்ந்து குஷ்ட ரோகங்களில் தவிப்பவர்க்கு இருந்தாய் நன் மருந்தாய்

பொறுமை எனும் குணம் வளர்த்து உறுதுணையாய் நின்று மக்கள் துயர் துடைத்து சிறந்தாய்

புவியில் தன் வாழ்நாள் முழுவதும் பிறக்கென வாழ்ந்து தொண்டுகள் புரிந்தாய்

தவம் செய்தே பிறந்த தனித் தன்மை கொண்ட இலட்சியத்தாய்

தன்னலம் கருதா உழைத்து பிறர் பிறர் மனதினை கவர்ந்தாய்

உள்ளத்தில் நல்ல வழிகள் அமைத்து உன்னத நிலையை அடைந்தாய்

இவ்வுலகம் உள்ளவரை எல்லோரும் வணங்கும் நீதானம்மா அன்புத்தாய்

ஏகனாம்பேட்டை
முருக. சண்முகம்

2 thoughts on “அன்னை தெரசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!