இன்றைய ராசி பலன் (ஞாயிற்றுக்கிழமை 20 ஆகஸ்டு 2023)

 இன்றைய ராசி பலன் (ஞாயிற்றுக்கிழமை 20 ஆகஸ்டு 2023)

மேஷம் :  இன்று சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பணியிடம் மகிழ்ச்சியாக இருக்கும். துணையுடன் நல்லுறவை பராமரிக்க நட்பாக நடந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்றைய நாள் பணவரவு அதிகமாக காணப்படும்.

ரிஷபம் : இன்று, சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படாது. துணையுடன் நல்லுறவை பராமரிக்கஅனுசரித்து செல்ல வேண்டு. இன்றைய நாள் பணவரவு குறைவாக இருக்கும்.

மிதுனம் : இன்று கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு குறைவாக காணப்படுவதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.

கடகம் : இன்று சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும்.  துணையுடன் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். இதனால் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்றைய நாள் நிதிநிலைமை சிறப்பாக காணப்படும்.

சிம்மம் : இன்று பதற்றம் நிறைந்த நாளாக இருக்கும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். இன்றைய நாள் பணவரவு நடுநிலையுடன் இருக்கும். அதனால் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

கன்னி :  இன்று சுறுசுறுப்பற்ற நாளாக இருக்கும். பணியிடத்தில் சகா ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தினால் பணியினை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. துணையிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். இன்றைய நாள் ஆரோக்யத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

துலாம் : இன்று  எந்த செயலையும் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணிச்சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. சகபணியாளர்களுடன் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் காணப்படும். துணையுடன் பேசும் போது வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைவாக காணப்படும். அதனால் பணத்தை திட்டமிட்டு செலவழித்திட வேண்டும்.

விருச்சிகம் : இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பணிகளை விரைவாக செய்து வெற்றி பெற்று மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

தனுசு  :  இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உள்ள பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு காணப்படும். இன்றைய நாள் பணவரவு திருப்தியாக காணப்படும்.

மகரம் : இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. பணியிடசூழல் திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது.  உங்களின் துணையுடன் நட்பு முறையோடு நடந்தால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும்.

கும்பம் : இன்று சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வோடு பழக வேண்டும். இன்றைய நாள்  வரவும், செலவும் நிறைந்து காணப்படும்.

மீனம் :  இன்று  சிறப்பான நாளாக இருக்கும். அதனால் புதிய முயற்சிகள் எடுக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கான பாராட்டு கிடைக்கும்.  உங்களின் துணையுடன் சந்தோசமாக பேசுவீர்கள். இன்றைய நாள்  பணவரவு நடுநிலையுடன் இருக்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...