30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம் – மாமன்னன் 50வது நாள் வெற்றி விழாவில் AR ரஹ்மான்
மாமன்னன் படத்தின் கதை 30 வருஷமா எனக்குள் இருந்த ஆதங்கம் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் ஜூன் மாதம் வெளியானது. மாமன்னன் படத்திற்கு பாராட்டுகள் குவிந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை பாராட்டினார். மாமன்னன் படம் சமுதாயத்தில் நிலவும் சாதி ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் வடிவேலு, மாமன்னன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பிவிட்டார். இதுவரை காமெடி கேரக்டரில் நடித்து வந்த வடிவேலு, முதன் முறையாக சீரியஸான கேரக்டரில் நடித்து பல காட்சிகளில் கண்கலங்க வைத்துவிட்டார். உதயநிதி ஸ்டாலின் கடைசி திரைப்படமான இப்படத்தில் அவரின் நடிப்புக்கு பாராட்டும் வகையில் இருந்தது. உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு அறிமுகமானதிலிருந்து எந்த படமும் இந்த அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்த நிலையில் கடைசி படமான மாமன்னன் வசூலில் தரமான சம்பவத்தை செய்துவிட்டது. இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுபேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரரஹ்மான், மாமன்னன் கதை 20, 30 வருஷமாக எனக்குள் இருந்த ஆதங்கம், ஏன் இப்படி நடக்கிறது. என்னால் இசை மூலமாக எதையும் செய்யமுடியவில்லை. யார் செய்கிறார்களோ அவர்களுடன் இணைந்து விட்டேன்.
மாரி செல்வராஜ் கதை சொல்லும் போது படம் இவ்வளவு நன்றாக வரும் என்று தனக்கு தெரியாது. மாமன்னன் படம் இந்த அளவுக்கு ஹிட்டாக காரணம் வடிவேலு தான். படத்தில் ஒரு காட்சிபார்த்தேன், உதயநிதி பின்னால் பைக்கில் அமர்ந்து வடிவேலு செல்லும் காட்சியைப் பார்த்து என் கண்ணே கலங்கிவிட்டது. அப்போது தான் அந்த பாட்டோட ஐடியாவே வந்தது என்று ஏ.ஆர்.ரஹ்மான் அந்த விழாவில் பேசினார்.