கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் கூட அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சேதம், உயிர்பலியை ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் கொலம்பியாவில் நேற்று இரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் அதிர்ந்தன. மருத்துவமனைகளிலும் நோயாளிகளும் உறவினர்களும் அச்சத்துடன் கட்டிடத்தில் இருந்து வெளியேறி மருத்துவமனை வளாகங்களில் நின்றனர். இந்த நிலநடுக்கம் பொகோட்டா, மெடலின் மற்றும் காலி போன்ற பெரிய நகரங்களிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் எதுவும் சேதம் ஆனதாகவோ உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவோ தகவல் எதுவும் இல்லை.