திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!
திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.
இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று கடித்துக் கொன்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் நடைபாதை வழியாக திருப்பதி செல்லும் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலிப்பிரி நடைபாதையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
மேலும் சிறுத்தைகளைப் பிடிக்க வனப்பகுதியில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த கூண்டினில் பெரிய சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. இந்த பிடிப்பட்ட சிறுத்தையின் கால் நகங்கள், ரத்தம் ஆகியவற்றை மரபணு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
இதன் மூலம் இந்த சிறுத்தை சிறுமியை கொன்றதா ? இல்லையா ?என்பது உறுதிபடுத்தப்படும்.
இந்த நிலையில் நேற்று அலிப்பிரி பாதையில் சிறுத்தை ஒன்றும், கரடி ஒன்றும் நடமாடியது தெரிந்துள்ளது.
அந்த சிறுத்தை சிறுமியை கொன்றதாக இருக்கலாம் என்று பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாட வாய்ப்புள்ளது என எச்சரித்து வருகின்றனர்.
எனவே பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில்:-
பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்.
நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.