புலவர் இராசு மறைவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல்!

 புலவர் இராசு மறைவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல்!

தமிழ் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தமளிக்கிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், முதன் முதலில் அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு பல அரிய வரலாற்று தகவல்களை அளித்தவரும், இன்றும் பல ஆயிரம் விவசாயிகள் பயனடையும் காலிங்கராயன் வாய்க்காலின் வரலாற்றையும் அதன் அறிவியலையும் தரவுகளோடு முதன் முதலில் எழுதியவருமான வரலாற்று ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர், தஞ்சை பல்கலைக்கழக மேனாள் கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது.

அவருடைய இழப்பு தொல்லியல் மற்றும் வரலாற்று துறைக்கு மட்டுமன்றி வருங்கால சந்ததியினருக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

புலவர் இராசு அய்யா மறைந்தாலும் அவராற்றிய மாபெரும் தொண்டு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். அய்யா அவர்களின் மறைவுக்கு உழவன் ஃபவுண்டேஷன் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் நடிகர் கார்த்தி.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...