அமேசானில் “ மாவீரன்” …!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மாவீரன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியானது.
மாவீரன்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.