தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!
தமிழகத்தில் 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழகத்தில் சேலம், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா செய்திகளை வெளியிட்டுள்ளார்.
- என்.ஸ்ரீநாதா – சட்டம் – ஒழுங்கு ஏஐஜி (காத்திருப்போா் பட்டியல்)
- இ.எஸ்.உமா – தலைமையிட ஏஐஜி (சட்டம் – ஒழுங்கு ஏஐஜி)
- அங்கிட் ஜெயின் – சென்னை தியாகராய நகா் துணை ஆணையா் (பொருளாதாரக் குற்றப் பிரிவு மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளா்)
- ஏ.கே.அருண் கபிலன் – சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (சென்னை தியாகராய நகா் துணை ஆணையா்)
- ஆா்.சிவகுமாா் – சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)
- எஸ்.சக்தி கணேசன் – சென்னை உயா்நீதிமன்ற வழக்கு கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா்)
- டி.மகேஷ்குமாா் – சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா் (சென்னை உயா்நீதிமன்ற வழக்கு கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி)
- ஆா்.சக்திவேல் – சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு தெற்கு துணை ஆணையா்)
- பவன்குமாா் ரெட்டி – தாம்பரம் மாநகர காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு துணை ஆணையா் (சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா்)
- பி.மகேந்திரன் – சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. (சென்னை அடையாறு துணை ஆணையா்)
- ஆா்.வி.வருண்குமாா் – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெற்கு மண்டல எஸ்.பி.)
- சுஜித்குமாா் – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெற்கு மண்டல எஸ்.பி. (திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)
- எம்.ராஜராஜன் – சேலம் மாநகர காவல் – தெற்கு துணை ஆணையா் (சென்னை உயா்நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா்)
- எஸ்.பி.லாவண்யா – சென்னை காவலா் பயிற்சி கல்லூரி எஸ்.பி. (சேலம் மாநகர காவல் – தெற்கு துணை ஆணையா்)
- எஸ்.சந்திரமெளலி – சேலம் மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா் (சென்னை காவலா் பயிற்சி கல்லூரி எஸ்.பி.)
- ஜி.உமையாள் – சென்னை கோயம்பேடு துணை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறையின் தலைமையிடம், நிா்வாகப் பிரிவு துணை ஆணையா்)
- பி.குமாா் – சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா் (சென்னை கோயம்பேடு துணை ஆணையா்)
- பி.சரவணன் – ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வடக்கு துணை ஆணையா்)
- டி.ரமேஷ்பாபு – தமிழக காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி. (காத்திருப்போா் பட்டியல்)
- பி.வி.விஜய காா்த்திக்ராஜ் – பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மதுரை எஸ்.பி. (தமிழக காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.)
- பகுயா ஸ்னேகாபிரியா – மதுரை மாநகர வடக்கு துணை ஆணையா் (பொது விநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மதுரை எஸ்.பி.)
- பி.கே.அரவிந்த் – சிவகங்கை மாவட்ட க் காவல் கண்காணிப்பாளா் (மதுரை மாநகர வடக்கு துணை ஆணையா்)
- எஸ்.செல்வராஜ் – ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி துணை இயக்குநா் (சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்)
- தீபா சத்யன் – தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை துணை ஆணையா் (ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாதெமி துணை இயக்குநா்)
- கே.ஜோஸ் தங்கையா – பொருளாதாரக் குற்றப் பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி. (தாம்பரம் மாநகர காவல் துறையின் பள்ளிக்கரணை துணை ஆணையா்)
- ஆா்.பொன் காா்த்திக்குமாா் – சென்னை அடையாறு துணை ஆணையா் (பொருளாதாரக் குற்றப் பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.)
- கே.அதிவீரபாண்டியன் – தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் நாகப்பட்டினம் எஸ்.பி. (தாம்பரம் மாநகர காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு துணை ஆணையா்)
- ஜி.ராமா் – ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5-ஆவது அணி கமாண்டன்ட் (தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் நாகப்பட்டினம் எஸ்.பி.)
- பண்டி கங்காதா் – ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. (கரூா் தமிழ்நாடு காகித ஆலை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.)
- எச்.ஜெயலட்சுமி – சென்னை மெட்ரோ ரயில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி (ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.)
- டி.குமாா் – மதுரை மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை மெட்ரோ ரயில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி)
- கே.மீனா – மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவு – 2 துணை ஆணையா்)
- என்.எஸ்.நிஷா – சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு-2 துணை ஆணையா் (மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்) என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.