ரங்கா…ரங்கா…. ஶ்ரீரங்கா…!!!
திருச்சி மாவட்டத்திலுள்ள ஶ்ரீரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று கருதப்படுகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரங்கனை சேவித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அக்கோவிலில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது என்கிற செய்தி அரங்கனின் பக்த கோடிகளை கவலையில் ஆழ்த்தி வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பகுதியான கீழவாசலில் அமைந்துள்ள கோபுர வாசலின் மேற்புறத்தில் தான் பலத்த விரிசல் ஏற்பட்டுள்ளது. கோவில் அதிகாரிகள் இதனை கண்டு சம்பந்த பட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
மேலும் விரிசல் 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிசலை சரி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனாலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விரிசல் விரிவடைந்தது.
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தலைமையில் விரிசல் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இதை சரி செய்வதற்கு 67 லட்சம் செலவில் திட்டம் தீட்டப்பட்டது.
அதற்கான நிதியை தனியாரிடம் இருந்தும் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் திரட்ட முயற்சி எடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜூலை 5 நள்ளிரவு 1.30 மணி அளவில் கீழவாசலில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் மேலும் விரிவடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்து உள்ளது.
இதனால் தற்போது 98 லட்சம் ரூபாய் செலவில் கோபுரத்தை புனரமைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இன்று காலை முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அந்த கோபுரம் மேலும் இடியாமல் தடுக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு மின்சாரம் நிறுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரமாக திகழ்கின்றது. இவை 17ஆம் நூற்றாண்டில் சேர்ந்தவையாகும். கோவிலின் தெற்கு திசையில் 400 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு. முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம் அகோபில மரத்தின் 44 வது சேர் அழகிய சிங்கரின் மோட்சம் கட்டுமான பணிகள் 1979 இல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றன. 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஸ்ரீரங்கம் கோவில் கோபுரங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.