இன்றைய ராசி பலன் (ஞாயிறு 06 ஆகஸ்டு 2023)
மேஷம் : இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக உரையாட வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சுறுசுறுப்பாக உணர மாட்டீர்கள்.
ரிஷபம் : இன்று இனிமையான தருணங்கள் காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். பண வரவு சிறப்பாக இருக்கும். கையிலிருக்கும் உபரி பணத்தை சேமிக்கும் வாய்ப்பு காணப்படும். சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
மிதுனம் : இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பண வரவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு ஆற்றல் உயரும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
கடகம் : இன்று சவால்கள் நிறைந்து காணப்படலாம். மனக் குழப்பங்களை எதிர்கொள்ள நேரலாம்.இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம். பண வரவு குறைந்து காணப்படும். சூழ்நிலையை சமாளிக்க கவனமாக பணத்தை கையாள வேண்டும். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் : இன்று சாதகமான நாளாக அமையாது. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். நற்பலன் காண உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். குறித்தநேரத்தில் பணியை முடிப்பது கடினமாக இருக்கும். அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் மேற்கொள்ளும் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். அதிக செலவுகள் கவலையை அளிக்கும்.
கன்னி : இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். திரைப்படம் பார்த்தல், இசை கேட்டல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
துலாம் : இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காணப்படுவீர்கள்.இந்தப் போக்கின் காரணமாக உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி காண்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத் தேவைக்காக பணம் செலவு செய்வீர்கள். மனதில் இருக்கும் நம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்காதீர்கள். அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள். அதிக செலவுகளால் வருத்தப்படுவீர்கள். இன்று உங்களால் சேமிக்க இயலாது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு : இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. என்றாலும். ஆன்மீக ஈடுபாடு மற்றும் இறை வழிபாடு மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம். பணவரவு குறைந்து காணப்படும். அதிக செலவுகளை விவேகத்துடன் கையாள வேண்டும். முடிந்த அளவு சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களிடம் பதட்டமான நிலை காணப்படும். இறை வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நற்பலன்கள் நடக்கும் நாள். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்.இன்றைய செயல்கள் எளிதாக நடக்கும். அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். உங்களின் சேமிக்கும் ஆற்றல் உயர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
கும்பம் : இன்று உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். என்றாலும் தேவையற்ற விஷயங்களுக்கு வருந்தாதீர்கள். புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி சாதகமான பலன்களைக் காணுங்கள். பண வரவு எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது. இன்று நிதி சம்பந்தப்பட்ட எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க குளிர் பானங்களை தவிர்க்கவும். சளி சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். பாதகமான பலன்களால் கவலை காணப்படும். என்றாலும் மனதை மகிழ்சியாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பணத்தை கையாளும் போது கவனமான சிக்கனமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கூடுதல் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கடினமான சூழ்நிலை உருவாகும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.