மேஷம் : இன்று சிறப்பான வாய்ப்பு காணப்படும். உங்கள் தனித்திறமையை பயன்படுத்தி உங்கள் இலக்குகளை முடிப்பீர்கள். மனதில் இருக்கும் தெளிவு காரணமாக சரியான முடிவை எடுப்பீர்கள். உங்கள் திறமை மற்றும் நேர்மையான முயற்சி மூலம் உங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும். இன்றைய நாளுக்குத் தேவையான, போதிய பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம் : இன்று சீரான பலன்கள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உங்களுக்கு உற்சாகமளிக்கும். அதிர்ஷ்டம் காரணமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு காணப்படுகின்றது. உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
மிதுனம்: உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீக செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. அதிகமாக சம்பாதித்தாலும் இன்று தேவையற்ற விஷயங்களுக்காக செலவு செய்ய நேரலாம். தூக்கமின்மை காரணமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கடகம்: இன்று சவாலான சூழ்நிலை காணப்படும்.இதனால் சமநிலை இழப்பீர்கள். நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இதனை சமாளிக்க வேண்டும். பாதகமான விளைவுகள் ஏற்படமால் இருக்க கவனமாக உரையடாவும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. உங்கள் சம்பாத்தியமும் குறைவாக இருப்பதன் காரணத்தால் பணத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சிம்மம்: இன்று உங்கள் ஆர்வம் மேம்படும் வகையிலான சூழ்நிலை காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பயணங்கள் ஏற்படலாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு உயர்வு நிலை கிடைக்கும். இதனால் நீங்கள் அதிகம் சம்பாதிப்பீர்கள். உங்களிடம் இருக்கும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி: இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். நிகழ்வுகள் சீராக நடக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். அவற்றின் மூலம் நன்மை விளையும். கணிசமான பண வரவு காணப்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நீங்கள் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
துலாம் : இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. வேதனையான சூழ்நிலையில் நீங்கள் பொறுமை இழந்து உணர்ச்சி வசப்படலாம். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதன் மூலம் நன்மை காணலாம். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு ஆறுதல் தரும். உங்கள் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: இன்று சில கடினமான சவாலான சூழ்நிலையை கையாள வேண்டியிருக்கும். இறைவழிபாட்டின் மூலம் ஆறுதல் பெறலாம். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது.இதனால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
தனுசு: இன்று மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். உங்கள் இலக்குகள் நிறைவேறும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் செயல்களின் மூலம் வெற்றி கிடைக்கும். பண வரவு உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதிர்ஷ்டம் காரணமாக இன்று கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள். திடமான மனதின் காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
மகரம்: இன்று விரும்பும் பலன்களை அடைய கடினமாக உழைக்க வேண்டும். இன்று அனுகூலமான நாளாக இருக்காது. நீங்கள் நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பெரியவர்களின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் பணம் சேமிப்பது குறையும். தேவையற்ற உணர்வுகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கும்பம்: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் உங்கள் சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். இந்தச் சவால்களை மேற்கொள்ள நீங்கள் திட்டமிட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது சிறந்ததல்ல. தேவையற்ற செலவுகள் ஏற்படும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணத்தை பயன் படுத்த இயலாது.
மீனம்: இன்று விரும்பும் பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழக்கும் வகையில் சில சவால்கள் காணப்படும்.நன்மையான பலன்கள் காண அனுசரித்து நடக்க வேண்டும். தைரியமாக இருந்தால் சிறப்பாக உணரலாம். பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் தேவையின்றி பணம் செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.