தென்னிந்திய மொழிகளில் புதிய படங்கள் || கைகோர்க்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்

 தென்னிந்திய மொழிகளில் புதிய படங்கள் || கைகோர்க்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். (TVF) மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்தக் கூட்டணி மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து வித்தியசமான கதை அம்சம் கொண்ட படங்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கதை எழுதுவதில் தொடங்கி, அதனைப் படமாக்கி, மக்களிடையே கொண்டு சேர்ப்பது வரை திரைப்படத்தின் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுவதில் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வித்தியாசமான, புதுமைமிக்க கதையம்சம் கொண்டவர்களை அர்த்தமுள்ள கூட்டணிகளின் மூலம் ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

டி.வி.எஃப். நிறுவனம்

இந்நிறுவனம் தொடங்கியதில் இருந்து, சுமார் பத்து ஆண்டுகளாக டி.வி.எஃப். மற்றும் இதன் நிறுவனர் அருனப் குமார், உண்மைகள் நிறைந்த கதைகளை உருவாக்கி வருகிறது. பல வரைமுறைகளை உடைத்து, பல லட்சம் பேருக்குத் தொடர்புடைய வகையில் அதிகப் பொழுதுபோக்கை இந்தியாவின் இளம் தலைமுறையினருக்குக் கொண்டுசேர்ப்பதில் டி.வி.எஃப். வெற்றிகரமாகச் செய்து காட்டியிருக்கிறது. பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள், ஊடகங்கள் தொடங்கப்பட்ட நிலையிலும் டி.வி.எஃப். தொடர்ந்து முன்னணியில் இருந்து தலைசிறந்த இணைய தரவுகளை வழங்கி வருகிறது.

கே.ஆர்.ஜி. நிறுவனம்

ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கே.ஆர்.ஜி. மற்றும் அதன் நிறுவனர் கார்த்திக் கவுடா தனது நீண்ட கால நண்பர் யோகி ஜி ராஜ் உடன் இணைந்து கன்னடா மக்களுக்குச் சிறப்பான கதைகளைக் கொண்டு சேர்த்திருக்கிறது. தொடங்கப்பட்ட குறுகிய காலகட்டத்திலேயே கே.ஆர்.ஜி. வெற்றிக் கதைகளின் மூலம் முன்னணி நிறுவனமாக மாறியது. இதை நினைவில் கொண்டு, சிறப்பான, கதைகளை வழங்குவதில் பெயர் எடுக்கும் நோக்கத்துடன் கன்னடா மொழியில் இருந்து கே.ஆர்.ஜி. தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறது.
கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனர் கார்த்திக் கவுடா கூறும் போது, “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ்-ஐ கன்னடா மற்றும் இதர பிராந்திய மொழி படங்களைத் தயாரித்து அவற்றைப் பெரிய அளவில் வினியோகம் செய்வதற்காகத் தொடங்கினோம். எங்களின் மிக முக்கிய நோக்கம், வித்தியாசமான கதை மற்றும் அவற்றை எழுதுவோரை ஊக்கப்படுத்துவது தான். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை எடுப்பதில் பிரபலமாக அறியப்படும் டி.வி.எஃப். உடன் கூட்டணி அமைப்பதன் மூலம் எங்களின் நோக்கம் விரிவடையும். இந்த நோக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வமாக இருந்துவரும், விஜய் சுப்ரமணியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.
புதிய கூட்டணி குறித்து டி.வி.எஃப். நிறுவனர் அருனப் குமார் கூறும் போது, “லைட், கேமரா, ஆய்வு மற்றும் இந்தியா முழுக்க கதைகளைக் கொண்டு சேர்ப்பதில் உள்ள ஆர்வத்தைத் தொடரும் வகையில், கன்னடா, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் புதிய படங்களைத் தயாரிக்க ரத்தன் பிரபஞ்சா, குருதேவ் ஹொய்சாலா போன்ற படங்களைத் தயாரித்த ஸ்டூடியோவுடன் கூட்டணி அமைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.
டி.வி.எஃப். நிறுவன தலைவர் விஜய் கோஷி இந்தத் திட்டம் குறித்து கூறும் போது, “அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் ஆழமான கதையம்சம் கொண்ட படங்களைக் கொடுக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பேன்-இந்தியா அளவுக்கு வெற்றி பெறும் வகையிலான படங்களை எடுப்பதற்காக நாங்கள் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் உடன் இணைவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். முற்றிலும் வித்தியாசமான கிரியேடிவ் டி.என்.ஏ. எங்களை இணைத்திருக்கிறது. இந்தக் கூட்டணி மூலம் பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான, புதுமை மிக்க கதைகளை படைக்க காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...