சென்னை புத்தகக் காட்சியும் புதிய அனுபவமும்

 சென்னை புத்தகக் காட்சியும் புதிய அனுபவமும்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த 6 ஆம் தேதி 46ஆவது புத்தகக் காட்சி தொடங்கியது. 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். மொத்தம் ரூ. 16 கோடிக்கு விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டது.

தென்னிந்திய புத்தக விற்பனையார் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி சார்பில் சென்னை ந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46வது சென்னை புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.22ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

கடந்த காலங்களை விட இந்த ஆண்டு புத்தகங்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு விற்பனை சுமார்  10 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு சுமார் 16 கோடியாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தனர்.

புத்தகக் காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவிகிதம் கழிவு வாங்கப்பட்டது. பல பதிப்பாளர்கள் சிறுவர்களுக்கான நூல்களை அதிகம் பதிப்பித்து விற்பனைக்கு வைத்திருந்தது இந்த ஆண்டின் சிறப்பு.

சிறைக்கைதிகளுக்காக புத்தகங்களை தானமாக பெற ‘கூண்டுக்குள் வானம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

வரலாறு அறிவியல் தொடர்பான புனைவுகள், அபுனைவுகளும் அதிகம் வெளியாகி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன.

வழக்கமான பதிப்பாளர்களின் புத்தக அரங்குகளுடன் தமிழ்நாட்டு அரசின் பாடநூல் கழகம் உள்ளிட்ட தமிழக அரசு பதிப்பகங்களும், மத்திய அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அகாதெமி போன்ற பதிப்பகங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.

அதுமட்டுமல்லாமல் காலச்சுவடு, என்.சி.பி.எச்., தேசாந்திரி, வம்சி, விகடன், தினமலர், தினகரன், தமிழ் இன்டு, நக்கீரன், ஆகிய பதிப்பகங்கள் இடம் பெற்றிருந்தன.

அது மட்டுமல்லாமல்,  கூண்டுக்குள் வானம், திருநங்கையருக்கான அரங்கு, சிலைகளை விற்கும் அரங்கு, மாணவர்களுக்கான அறிவியல் அரங்கு, இல்ம் தேடிக் கல்வி அரங்கு, இயற்கை ஆர்வலர்களுக்கான தும்பி அரங்கு, இயல்வாகை அரங்கு, ஆங்கில நூல் புத்தக அரங்குகள் என இந்த ஆண்டு வித்தியாசமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தால் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு (2023)  15 லட்சம் வாசகர்கள் வரகை தந்தனர் என்றும் 16 கோடி ரூபாய்க்கு மேல் நூல்கள் விற்பனை ஆனது.

பொதுவாக கடந்த ஆண்டைவிட விற்பனையில் அதிகம் என்றாலும்கூட மக்கள் வருகை குறைவாகவே இருந்தது. அதற்குக் காரணம் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுகின்றன. இன்னொன்று புத்தகங்களின் விலையோ மிக அதிகமாக இருந்தது. 100 பக்கம் கொண்ட புத்தகத்தின் விலை 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது போப்பர் மற்றும் அச்சுக்கூலி உயர்வே காரணம் என்கின்றனர் பதிப்பாளர்கள். ஆனால் தேவையான புத்தகங்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.

இந்த ஆண்டும் வழக்கம்போல எல்லா அரங்குகளிலும் பொன்னியின் செல்வன் புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதோடு சாண்டியல்யன், அகிலன், கி.ராஜநாராயணன், பாலகுமாரன், புதுமைப்பித்தன், சு.வெங்கடேசன் போன்றோரின் நூல்கள் விரவிக் கிடந்தன.

நாள்தோறும் இயக்கிய ஆளுமைகளின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. அங்கு நூல் வெளியீடு, மற்றும் கலை நிகழ்ச்கிகள் நடந்தப்பட்டன. சிற்றரங்குகளிலும் நூல்கள் வெளியிட்டு விழாக்கள் நடந்தன.

இந்தாண்டு உணவுக் கடைகள், ஓவியம், கடலை, சுண்டல் விற்கும் சிறு வியாபாரிகள், ஊறுகாய் வகை விற்கும் ராஜஸ்தான் கடைகள் மற்றும் வித்தியாசமான உணவுகள் விற்கும் கடைகள் இடம் பிடித்திருந்தன.

அரங்கு முழுவதும் பிரபல இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் என கண்காட்சியில் வந்து சென்றார்கள். இந்தக் காட்சிகளைக் காண இன்னும் ஓராண்டு காத்திருக்கவேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...