தமிழக அரசின் முன்னோடித் திட்டம் கலைத் திருவிழா

 தமிழக அரசின் முன்னோடித் திட்டம் கலைத் திருவிழா

அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட கலைத்திருவிழா. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. 2023 ஜனவரி 12ஆம் தேதி இன்று மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர் களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டுக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும் அவர்களுக்குப் பிடித்த கலையைக் கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிறுத்தி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட்டது.

முதல் பிரிவு 6 முதல் 8-ம் வகுப்பு வரை, இரண்டாவது பிரிவு 9 மற்றும் 10-ம் வகுப்பு, மூன்றாவது பிரிவு 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி அளவில் போட்டிகள் நடைபெற்றது.

மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்ட வேப்பேரி பள்ளியில் ஆசிரியை எஸ். விஜயலட்சுமி, (அரசு உயர்நிலைப் பள்ளி வில்லிவாக்கம்) அவர்களிடம் பேசினோம். “நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கலைத் திருவிழாவைப் பார்த்தேன். அங்கே கல்வி அமைச்சர் பலூன் ஏற்றி பேசிய ஒரு விஷயம் அனைவரையும் கவர்ந்தது. நமது முதலமைச்சரின் நோக்கமே மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்களுடைய பொறுப்பு என்று கூறியிருக்கிறார் என்று சொன்னார். அது உண்மைதான் என்று இங்கு கலந்துகொண்ட மாணவர்களைப் பார்க்கும்போது தெரிகிறது. 38 மாவட்டங்களிலிருந்து  கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது ஆசிரியர்களான எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியிலிருந்து வந்தவர்கள் ஆடிய தேவராட்டம் என்கிற ஒரு நிகழ்த்துக் கலையைப் பார்த்தேன். மிக அருமையாக மாணவச் செல்வங்கள் ஆடினார்கள். இது ஒரு நல்ல திட்டம்” என்றார்.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று கலைத் திருவிழாவின் இறுதிப் போட்டி ஜனவரியில் நடத்தப்படும் போட்டியில் மாணவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி அவர்களுக்கு ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் அரசு சார்பில் வழங்கப்பட இருக்கிறது.

இந்த மாணவர்கள் வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. முற்றிலும் இலவசம். அவர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து பெரிய ஸ்டார் ஓட்டல்கள், உணவும் மிகவும் உயர்தரமானவை. வந்த செல்ல பேருந்து வசதியும் செய்யப்பட்டது. சென்னையில் நடந்த ஐந்து நாள் பயிற்சியின்போதும் மாணவர்களுக்கு உயர்தர உணவு வழங்கப்பட்டதோடு தங்குவதற்கு ஸ்டார் ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சிகள் சென்னை வேப்பேரியில் ஒரு பள்ளியிலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடத்தப்பட்டது. மொத்தம் 2000 மாணவர்கள் இந்தக் கலைத்திருவிழாவில் கலந்துகொண்டனர். முதல் பரிசு 593 மாணவர்களும் இரண்டாம் பரிசு 597 மாணர்களும் மூன்றாம் பரிசு 599 மாணவர்களும் பெற்றனர்.

மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் நவம்பர். 23 முதல் 28ஆம் தேதி வரை நடத்தப்பட்டது, வட்டார அளவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் டிசம்பர். 6 முதல் டிசம்பர் 10 தேதி வரையும், மாநில அளவில் ஜனவரி 3ஆம் தேதி முதல் 11-ம் தேதிக்குள்ளும் நடத்தி முடிக்கப்பட்டு 11-1-2023 நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க இருக்கிறார்.  

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...