சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு

 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 40% அதிகரிப்பு

தமிழகத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டு 40 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்கிற செய்தி தமிழக மக்கள் அனை வரையும் பகீரிட வைக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே நான்கா வது இடமாகும். இதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத் திய தரவுகள் உறுதி செய்துள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தவரை தற்கொலைகளில் சென்னை 2வது இடத்தில் இருக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 39.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  இது தொடர்பான உண்மையான காரணத்தை அறிய மாநில குற்ற ஆவணக் காப்பகம், அனைத்து மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஜி.பி.க்கள் ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளது .

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019-ம் ஆண்டில் 4,139 வழக்குகளும், 2020ஆம் ஆண்டில் 4,338 வழக்குகளும் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் கடந்த ஆண்டு இந்த வழக்குகளின் எண்ணிக்கை 6.064 ஆக அதிகரித்துள்ளன.

போக்சோ சட்டத்தின் கீழ் 56 கொலைகள், 69 குழந்தைகள் இறப்பு ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

16 சிறுவர்களைக் கொலை செய்ய முயன்ற வழக்குகளும், 8 சிறுவர்களைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்குகளும்  பதிவாகி உள்ளன. சிறுவர்களைத் தாக்கி சிறிய காயம் ஏற்படுத்தியதாக 80 வழக்குகளும், கடுமையான காயம் ஏற்படுத்தியதாக 8 வழக்குகளும் 319 கடத்தல் வழக்குகளும் 47 சிறுமிகள் கடத்தி விற்கப்பட்டுள்ளதாகவும்  வழக்குகள் பதிவாகி உள்ளன.

4,562 சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்ததாக 4,465 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,435 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 34 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள் ளனர்.

குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 128 குழந்தை கள் பாதிக்கப்பட்டதாக 101 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 வழக்குகள் சிறுவர் இல்லங்களின் பராமரிப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சைபர் க்ரைம் குற்றங்கள் மூலம் 15 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கடத்தியதாகவும் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.

கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சென்னையில் 435 வழக்குகளும் கோவையில் 81 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சிறுமியர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். 2100க்கும் மேற்பட்டவர்கள் நண்பர்கள், இணையவழி நண்பர்கள் உள்ளிட்டோரால் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அதன் காரணமாக வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி கள் தெரிவித்தனர்.

சிறுவர்களைக் காப்பது நம் நாட்டைக் காப்பதுபோல். கண்ணும் கருத்து மாகக் காப்பாற்றவேண்டியது சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் காவல் துறையில் கையில்தான் உள்ளது. பொதுமக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...