ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்

 ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்

அனைத்து கலைகளுக்கும் வித்தைகளுக்கும் மந்திரங்களுக்கும் தலைவராகப் பிரகாசிக்கும மகாவிஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர். எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் (11-8-2022) நாளைய பௌர்ணமி  தினம்.  இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. ஆவணி மாதத் திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படு கிறது. பெருமாள் ஆலயங்களில் ஹயக்ரீவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன.

ஹயக்ரீவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் குதிரை முகமும் மனித உடலும் கொண்டு உருவானவர். ஹயக்ரீ வரை கல்வித் தெய்வம்.  ஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிப்பவருக்கு அனைத்து ஞானமும் கிடைக்கும்.

மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டி னார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான்முகனுக்கு வேதத்தை உபதேசம் செய்தார்.

மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனி யாததால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர். இத் திரு வுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர்.  ஹயக்ரீவருக்கு கல்விக்குக் குருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பத னால் செல்வத்திற்குத் தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார். ஸ்ரீமகா லட்சுமியை மடியில் அமர்த்திக்கொண்டிருக்கும் அவரை வணங்குவதால் சிறந்த அறிவு, கல்வியில் நாட்டம், தேர்வில் வெற்றி, செல்வம் புகழ் முதலிய அனைத்து செல்வங்களையும் பெறலாம். பூஜை, பாராயணம், ஜபம் போன்றவற்றால் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை ஆராதிப்பவருக்கு அனைத்து ஞானமும் கிடைக்கப் பெறும்.

படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதி களின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், புதுச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நாளை ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் அவரை வழிபட்டு அருள் பெறுவோம்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...